Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

FD கால்குலேட்டர்

சுலபமாக பயன்படுத்தக்கூடிய எங்களின் கால்குலேட்டரை பயன்படுத்தி, உங்கள் FD முதிர்வு தொகையும் சம்பாதித்த வட்டியையும் கணக்கிடுங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட் கால்குலேட்டர்

ஃபிக்ஸட் டெபாசிட்கள் என்பது பாரம்பரிய சேமிப்பு விருப்பமாகும். பொதுவாகவே குறைந்த ஆபத்தும் அதிக பணப்புழக்கமும் உள்ளதால், இவை அதிகமாக விருப்பத்திற்குரியதாக இருக்கின்றன. ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்பட்ட பணம் எவ்வளவு வளர்ச்சி பெறக்கூடும் என்பதைப் பற்றிய தெளிவான யோசனையைப் பெறுங்கள். மேனுவல் வேலைகளை விட்டுவிடுங்கள்; அதற்கு பதிலாக, எளிதாகவும் நம்பகமாகவும் செயல்படும் இந்த ஃபிக்ஸட் டெபாசிட் கால்குலேட்டரை பயன்படுத்துங்கள். பிரின்சிபல் தொகை மற்றும் வழங்கப்படும் FD வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடும் இந்தக் கருவி, உங்களுக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

about-us-image2

FD கால்குலேட்டர் என்றால் என்ன?

FD கால்குலேட்டர் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் கால்குலேட்டர் என்பது ஆன்லைன் கருவியாகும். ஃபிக்ஸட் டெபாசிட் காலப்போக்கில் அளிக்கும் ரிட்டர்ன்களுக்கான மதிப்பீடுகளை கணக்கிட உதவுகிறது. இந்த கருவியின் உதவியுடன், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கான பிரின்சிபல் தொகை மீதான ரிட்டர்ன்களுக்கான மதிப்பீடுகளைப் பெற முடியும். கருவியைப் பயன்படுத்தும் போது, பிரின்சிபல் தொகையும் FD வட்டி விகிதமும் மாற்றி அமைக்கலாம். இந்த மாற்றங்களின் அடிப்படையில், FD ரிட்டர்ன்களுக்கான கால்குலேட்டர் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் பல்வேறு நேரங்களிலான ரிட்டர்ன்களுக்கான மதிப்பீடுகளை வழங்கும்.

FD கால்குலேட்டர் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?

FD கால்குலேட்டர் என்பது எளிதாகவும் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கருவி. இது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியபல் காரணிகளின் அடிப்படையில், உங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் இருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்களுக்கான விரைவான மதிப்பீடுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

துல்லியமான மதிப்பீடுகள்

FD கால்குலேட்டர், முதிர்வு தொகையும் திரட்டப்பட்ட வட்டியும் ஆகியவற்றிற்கான துல்லியமான கணிப்புகளை வழங்குகிறது.

calci

ஒப்பீடு

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த பிளான்களை தேர்ந்தெடுக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் FD பிளான்களை நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்.

calci

நிதி திட்டமிடல்

உங்கள் ரிட்டர்ன்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம், உங்கள் நிதி இலக்குகளை திறம்படத் திட்டமிடலாம்.

calci

நேரம் சேமித்தல்

 

இது மேனுவல் கணக்கீடுகளின் சிக்கல்களை நீக்கி, உடனடி முடிவுகளை வழங்குகிறது.

calci

FD கால்குலேட்டரின் நன்மைகள்

பயனர் நட்பு இடைமுகம்

எளியதாகவும் உள்ளுணர்வு சார்ந்த வடிவமைப்பும் கொண்டதால், அனைவரும் எளிதாக பயன்படுத்தலாம்.

calci

விரைவான முடிவுகள்

உடனடி கணக்கீடுகளை வழங்கி, நேரம் மற்றும் முயற்சியைச் சேமிக்கிறது

calci

தனிப்பயனாக்கக்கூடிய உள்ளீடுகள்

டெபாசிட் தொகை, காலம், வட்டி விகிதம் போன்ற தகவல்களை உள்ளீடு செய்து, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப முடிவுகளை வழங்குகிறது.

calci

துல்லியமான கணிப்புகள்

பிழையற்ற கணக்கீடுகளின் மூலம், நிதித் திட்டமிடலில் நம்பகத்தன்மையை வழங்குகிறது

calci

பிளான்களை ஒப்பிடும் வசதி

பல்வேறு வங்கிகளின் FD திட்டங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு ஏற்ற சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

calci

வேரியபல் வட்டி விகிதங்களுக்கு ஆதரவு

மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வட்டி செலுத்துதல்களுடன் கூடிய திரட்டல் (cumulative) மற்றும் திரட்டல் அல்லாத (non-cumulative) FDகளையும் கணக்கிடுகிறது.

calci

வேறு வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது

குடியிருப்பாளர்கள் மற்றும் NRIகள் ஆகிய இருவருக்கும் ஏற்ற வகையில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் கணக்கீடு முறையை வழங்குகிறது.

calci

ஆன்லைனில் கிடைக்கும் வசதி

இணைய இணைப்புடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சாதனத்திலிருந்தும் பயன்படுத்தலாம்.

calci

FD கால்குலேட்டரை எவ்வாறு பயன்படுத்துவது

பிரின்சிபல் தொகையை உள்ளிடவும்

நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையைக் குறிப்பிடவும்.

choose-plan

கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்

FDக்கான காலத்தைக் தேர்ந்தெடுக்கவும்.

choose-plan

வட்டி விகிதத்தை உள்ளிடவும்

தேர்ந்தெடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கும் வட்டி விகிதத்தை உள்ளிடவும்.

choose-plan

வட்டி செலுத்தும் இடைவெளியைத் தேர்வுசெய்யவும்

திரட்டல் (cumulative) அல்லது திரட்டல் அல்லாத  (non-cumulative) ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

choose-plan

கணக்கிடு

மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகையும் ஈட்டிய வட்டியையும் காண, 'கணக்கிடு' பட்டனை அழுத்தவும்.

choose-plan

How do Retirement Calculators work?

FD முதிர்வுத் தொகைக்கான வட்டியைக் கணக்கிடுவதற்கான ஃபார்முலா என்ன?

ஒரு FD இல் ஈட்டப்படும் முதிர்வுத் தொகையும் வட்டியும் கூட்டு (compound) வட்டி ஃபார்முலாவின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

A = P(1 + r/n)^nt

இங்கு:

  • A என்பது வட்டி உட்பட, n ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டப்பட்ட பணத் தொகை
  • P என்பது பிரின்சிபல் தொகை
  • r என்பது ஆண்டு வட்டி விகிதம் (டெசிமல் ஆக)
  • n என்பது வருடத்திற்கு வட்டி எத்தனை முறை கூட்டு வட்டியாகக் கணக்கிடப்படுகிறது
  • t என்பது பணம் முதலீடு செய்யப்பட்ட காலம் (ஆண்டுகளில்)
bmi-calc-mob
bmi-calc-desktop

ஒரு FD இல் ஈட்டப்படும் முதிர்வுத் தொகையும் வட்டியும் சிம்பிள் வட்டி ஃபார்முலாவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

  1. சிம்பிள் வட்டி ஃபார்முலா
     

    திரட்டல் அல்லாத FDகளில், வளர்ச்சி சிம்பிள் வட்டியினால் நடைபெறுகிறது. இதை கீழ்க்கண்ட ஃபார்முலாவின் மூலம் கணக்கிடலாம்:
     

    A=P(1+rt)
     

    இங்கு,

    • A என்பது மொத்த திரட்டப்பட்ட தொகை (பிரின்சிபல் + வட்டி)
    • P என்பது பிரின்சிபல் தொகை
    • r என்பது வருடத்திற்கு வட்டி விகிதம் (டெசிமல் ஆக)
    • t என்பது கால அளவு (ஆண்டுகளில்)
  2. வட்டி செலுத்துதல்கள்  

    • மாதாந்திரம்: வட்டி உங்கள் கணக்கில் மாதந்தோறும் கிரெடிட் செய்யப்படும்.

    • காலாண்டு / ஆண்டுதோறும்: வட்டி கூட்டு வட்டியாகக் கணக்கிடப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

குடியிருப்பாளர் மற்றும் NRI வாடிக்கையாளர்களுக்கான FD கணக்கீடு

FD கணக்கீடு, குடியிருப்பாளர்கள் மற்றும் NRIகளுக்கு இடையில் சற்று மாறுபடக்கூடும்:

 

குடியிருப்பாளர்கள்

 வட்டி விகிதங்கள், FD இன் கால அளவு மற்றும் வங்கியின் பாலிசிகளின்படி மாறுபடுகின்றன.

ஈட்டப்படும் வட்டிக்கு மூலத்தில் வரி பிடித்தம் செய்தல் (TDS) பொருந்தும்.

NRIகள்

NRIகள், NRE (Non-Resident External) அல்லது NRO (Non-Resident Ordinary) FDகளில் முதலீடு செய்யலாம்.

NRE FDகள் வரிவிலக்குடன் வழங்கப்படுகின்றன, ஆனால் NRO FDகளில் ஈட்டப்படும் வட்டிக்கு TDS விதிக்கப்படுகிறது.

FD வட்டி விகிதங்கள்

ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையில் மாறுபடுகின்றன. பொதுவாக, விகிதங்கள் 3% முதல் 8% வரையிலாக காணப்படுகின்றன. இது பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:
 

  • டெபாசிட் தொகை
     

  • Tதேர்ந்தெடுக்கப்பட்ட கால அளவு
     

  • FD வகை (திரட்டல் அல்லது திரட்டல் அல்லாத)

மூத்த குடிமக்கள், கூடுதல் நன்மையாக அதிக வட்டி விகிதங்களைப் பெறுவார்கள்.

FD இல் எப்படி முதலீடு செய்வது?

FD கால்குலேட்டரை பயன்படுத்துவது எளிது

 

 

வங்கி அல்லது நிறுவனத்தைத் தேர்வுசெய்யவும்

பல்வேறு FD திட்டங்களை ஆராய்ந்து, ஒப்பிட்டு உங்களுக்கு ஏற்றவற்றைத் தேர்வுசெய்யவும்.

choose-plan

டெபாசிட் தொகையைத் தீர்மானிக்கவும்

 

முதலீடு செய்ய வேண்டிய பிரின்சிபல் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.

choose-plan

கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்

FDக்கான கால அளவை தேர்ந்தெடுக்கவும்.

 

choose-plan

வட்டி செலுத்தும் ஆப்ஷனை தேர்வுசெய்யவும்

திரட்டல் (cumulative) அல்லது திரட்டல் அல்லாத  (non-cumulative) ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும்.

choose-plan

ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்

அடையாளச் சான்று (ID), முகவரிச் சான்று மற்றும் PAN கார்டு உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வழங்கவும்.

choose-plan

டெபாசிட் தொகையை செலுத்தவும்

தேர்ந்தெடுத்த வங்கி அல்லது நிறுவனத்திற்கு தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யவும்.

choose-plan

ஒப்புதலைப் பெறவும்

குறிப்புக்காக FD ரசீது அல்லது சான்றிதழைச் சேகரிக்கவும்.

choose-plan

நிலையான வைப்புத் தொகைக்கான தகுதி அளவுகோல்கள்

இந்தியாவில், நிலையான வைப்புத் தொகை (FD) கணக்கைத் திறப்பதற்கான தகுதி அளவுகோல்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே சற்று மாறுபடக்கூடும்.

வயது

Question
வயது
Answer
  • குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மைனர்களும் FD கணக்கைத் திறக்கலாம், ஆனால் அது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் கண்காணிப்பில் இயங்க வேண்டும்.
Tags

தேசியம்

Question
தேசியம்
Answer
  • இந்திய குடியிருப்பாளர்கள்.

  • குடியுரிமை பெறாத இந்தியர்கள் (NRIகள்) NRE மற்றும் NRO டெபாசிட் கணக்குகள் போன்ற சிறப்பு வகை FDகளுக்கு தகுதி பெற்றவர்கள்.

Tags

அடையாள ஆவணங்கள்

Question
அடையாள ஆவணங்கள்
Answer
  • PAN (நிரந்தர கணக்கு எண்) கார்டு.

  • ஆதார் கார்டு அல்லது அரசாங்க அங்கீகரிக்கப்பட்ட பிற அடையாள ஆவணங்கள் (எ.கா., பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அல்லது ஓட்டுநர் உரிமம்).

Tags

ஜாயின்ட் கணக்குகள்

Question
ஜாயின்ட் கணக்குகள்
Answer
  • பிரைமரி வைத்திருப்பவர் மற்றும் கூடுதல் ஜாயின்ட் கணக்கு வைத்திருப்பர்கள் இணைந்து FD (ஃபிக்ஸட் டெபாசிட்) கணக்கைத் திறக்கலாம்.
Tags

டிரஸ்ட்கள் மற்றும் சொசைட்டிகள்

Question
டிரஸ்ட்கள் மற்றும் சொசைட்டிகள்
Answer
  • பதிவுசெய்யப்பட்ட டிரஸ்ட்கள், சொசைட்டிகள் மற்றும் பாட்னர்ஷிப் நிறுவனங்கள் FD கணக்குகளைத் திறக்கத் தகுதியுடையவை.
Tags

நிறுவனங்கள்

Question
நிறுவனங்கள்
Answer
  • இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள், குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில் FDகளில் முதலீடு செய்யலாம்.
Tags

தனிநபர்களுக்கு

Question
தனிநபர்களுக்கு
Answer
  • அடையாளச் சான்று (PAN, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
  • முகவரி சான்று (மின்சாரம்/குடிநீர் கட்டண ரசீதுகள், ரேஷன் கார்டு போன்றவை)
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
Tags

NRIகளுக்கு

Question
NRIகளுக்கு
Answer
  • பாஸ்போர்ட் மற்றும் விசா
  • வெளிநாட்டு முகவரிச் சான்று
  • NRE/NRO கணக்கு விவரங்கள்
Tags

நிறுவனங்கள் / டிரஸ்ட்கள் / ஃபர்ம்கள்

Question
நிறுவனங்கள் / டிரஸ்ட்கள் / ஃபர்ம்கள்
Answer
  • பதிவு சான்றிதழ் / நிறுவல் சான்றிதழ்.
  • முகவரி சான்று.
  • அங்கீகரிக்கப்பட்ட கையொப்ப ஆவணங்கள் (அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியால் கையெழுத்திடப்பட்டவை).
Tags

குறைந்தபட்ச டெபாசிட் தொகை

Question
குறைந்தபட்ச டெபாசிட் தொகை
Answer
  • பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைந்தபட்ச டெபாசிட் தொகையை நிர்ணயித்துள்ளன. இது பொதுவாக ₹1,000 முதல் தொடங்கும், ஆனால் வங்கியின்படி மாறுபடலாம்.
Tags

வங்கி-சார்ந்த அளவுகோல்கள்

Question
வங்கி-சார்ந்த அளவுகோல்கள்
Answer
  • சில வங்கிகள் தங்களது இன்டர்னல் பாலிசிகளின் அடிப்படையில் கூடுதல் தேவைகள் அல்லது நிபந்தனைகளை விதிக்கக்கூடும்.
Tags

FD வட்டி கால்குலேட்டரை பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்

பிரின்சிபல் தொகை

நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடும் தொகை.

choose-plan

கால அளவு

FD இன் காலம், இது வட்டி விகிதத்தை பாதிக்கும் முக்கியக் காரணி.

premium-amount

வட்டி விகிதம்

ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் வங்கிகள் மற்றும் தவணைக் காலங்களைப் பொறுத்து மாறுபடும்.

select-stategy

காம்பவுண்டிங் இடைவெளி

மாதந்தோறும், காலாண்டுதோறும் அல்லது ஆண்டுதோறும் வட்டி காம்பவுண்டிங் செய்யப்படும்.

make-payments

வரி தாக்கங்கள்

சில வகையான FDகளில் TDS (வரி பிடித்தம் செய்தல்) மற்றும் வரிச் சலுகைகள் உள்ளன.

make-payments

பணம் செலுத்தும் ஆப்ஷன்கள்

திரட்டல் (Cumulative) மற்றும் திரட்டல் அல்லாத (Non-Cumulative) வகைகள்.

make-payments

மூத்த குடிமக்களுக்கான நன்மைகள்

மூத்த குடிமக்களுக்கு உயர்ந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

choose-plan

கணக்கின் வகை

குடியிருப்பாளர் FD vs. NRE/NRO FD திட்டங்கள்.

premium-amount



FD கால்குலேட்டரை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் முதலீடுகளை திட்டமிட்டு, வருமானத்தை அதிகரித்து, உங்கள் நிதி இலக்குகளை எளிதாக அடையலாம். நீங்கள் குடியிருப்பாளராக இருந்தாலும், NRIயாக இருந்தாலும், ஃபிக்ஸட் டெபாசிட் தொகையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது உங்கள் நிதி எதிர்காலத்தை உறுதியுடன் பாதுகாக்க உதவும்.

எங்கள் கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் நிதி எதிர்காலத்தை உருவாக்குங்கள்

வருமான வரி கால்குலேட்டர்

Savings

கால பிரீமியம் கால்குலேட்டர்

Savings

ULIP கால்குலேட்டர்

Savings

பிஎம்ஐ கால்குலேட்டர்

Savings

HLV கால்குலேட்டர்

Savings

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய கால்குலேட்டர்

Savings

குழந்தை திட்ட கால்குலேட்டர்

Savings

எதிர்கால செல்வ கால்குலேட்டர்

Savings

கூட்டு கால்குலேட்டரின் சக்தி

Savings

தாமத கால்குலேட்டரின் செலவு

Savings

PPF கால்குலேட்டர்

Savings

HRA கால்குலேட்டர்

Savings

EMI கால்குலேட்டர்

Savings

பணம் செலுத்திய கால்குலேட்டர்

Savings

நிதி ஒதுக்கீடு கால்குலேட்டர்

Savings

SIP கால்குலேட்டர்

Savings

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கு மாதாந்திர வட்டி கிடைக்குமா?

Answer

ஆம், நீங்கள் திரட்டல் அல்லாத FD (ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்) கீழ் மாதாந்திர வட்டி செலுத்துதலைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நிலையில், வட்டி கூட்டுத் தொகையாக சேர்க்கப்படுவதற்குப் பதிலாக, மாதாந்திரம், காலாண்டு போன்ற இடைவெளிகளில் உங்கள் கணக்கில் நேரடியாக கிரெடிட் செய்யப்படும்.

முன்கூட்டியே (ப்ரீமெச்சூர்) FD அபராதம் எப்படி கணக்கிடப்படுகிறது?

Answer

அபராதம் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது:

  • நிறைவுற்ற காலத்திற்கான பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் குறைப்பு.

  • கூடுதல் அபராத விகிதம் (எ.கா., 0.5% முதல் 1%) வங்கியால் வசூலிக்கப்படுகிறது.

    உதாரணம்: கால அளவுக்கான பொருந்தக்கூடிய விகிதம் 5% மற்றும் அபராதம் 1% எனில், நீங்கள் 4% வட்டி மட்டுமே பெறுவீர்கள்.

FD இல் 'முதிர்வுத் தொகை' என்ன?

Answer

முதிர்வுத் தொகை என்பது FD காலத்தின் முடிவில் பெறப்படும் மொத்தத் தொகையாகும், இதில் பிரின்சிபல் தொகையும், சேர்க்கப்பட்ட வட்டியும் அடங்கும்.

FD திறக்கத் தேவையான குறைந்தபட்ச தொகை என்ன?

Answer

FD திறக்கத் தேவையான குறைந்தபட்ச தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும், ஆனால் பொதுவாக ₹1,000 இலிருந்து தொடங்கும்.

பொது குடிமக்களுக்கு FD வட்டி விகிதம் என்ன?

Answer

பொது குடிமக்களைப் பொறுத்தவரை, FD விகிதங்கள் பொதுவாக வங்கி, கால அளவு மற்றும் சந்தை நிலைமைகளைப் பொறுத்து ஆண்டுதோறும் 3% முதல் 7% வரை இருக்கும்.

வங்கி FD முன்கூட்டியே திரும்பப் பெற்றால் அபராதம் உண்டா?

Answer

ஆம், பெரும்பாலான வங்கிகள் முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு அபராதம் விதிக்கின்றன. அபராதம் பொதுவாக:

  • பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் 0.5% முதல் 1% வரை குறைப்பு.

  • சில வங்கிகள் சிறப்பு நிபந்தனைகள் அல்லது குறிப்பிட்ட FD திட்டங்களுக்கு அபராதத்தை தள்ளுபடி செய்கின்றன.

வங்கி FD இல் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுமா? எப்படி?

Answer

ஆம், FDயிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது.

  • மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படும் (TDS): ஒரு நிதியாண்டில் ஈட்டிய வட்டி ₹40,000-ஐ (மூத்த குடிமக்களுக்கு ₹50,000) கடந்து இருந்தால், 10% TDS பிடித்தம் செய்யப்படும்.

  • வரி விதிக்கக்கூடிய வருமானம்: வட்டி உங்கள் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, பொருந்தக்கூடிய வருமான வரி அடுக்கின்படி வரி விதிக்கப்படும்.

  • ஃபார்ம் 15G/15H: உங்கள் வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்கு கீழே இருந்தால், TDS ஐ தவிர்க்க இந்த ஃபார்ம்களை சமர்ப்பிக்கலாம்.

வங்கி FD மீதான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Answer

FD மீதான வட்டி பின்வரும் ஃபார்முலாக்கள் மூலம் கணக்கிடப்படுகிறது:

  • எளிய (சிம்பிள்) வட்டி (SI): 

     A=P(1+rt)

  • கூட்டு (காம்பவுண்டு) வட்டி (CI):

    A = P(1 + rn)nt

எனினும், மேனுவல் முறையில் கணக்கிடுவது நேரமாகும் மற்றும் பிழை நிகழும் வாய்ப்பு உண்டு. ஃபிக்ஸட் டெபாசிட் கால்குலேட்டரை பயன்படுத்துவது உங்கள் ரிட்டர்ன் மதிப்பீடுகளை உண்மையான முடிவுகளுக்கு மிக நெருக்கமாகக் கணக்கிடும் விரைவான மற்றும் எளிதான வழி ஆகும்.

மூத்த குடிமக்களுக்கான வங்கி FD மீதான வட்டி விகிதம் என்ன?

Answer

மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள், பொதுவாக, வழக்கமான விகிதங்களை விட 0.25% முதல் 0.50% வரை அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நிலையான வட்டி விகிதம் 6% என்றால், மூத்த குடிமக்கள் 6.5% வரையில் சம்பாதிக்கலாம். சரியான விகிதம் வங்கி மற்றும் கால அளவைப் பொறுத்து மாறுபடும்.

எதிர்கால நிதி திட்டமிடலில் FD கால்குலேட்டர் எவ்வாறு உதவுகிறது?

Answer

FD கால்குலேட்டர் பின்வருமாறு உதவுகிறது:

  • டெபாசிட் தொகை மற்றும் கால அளவை அடிப்படையாகக் கொண்டு முதிர்வு தொகையை மதிப்பிடுதல்.

  • வெவ்வேறு வங்கிகள் மற்றும் திட்டங்களில் வருமானத்தை ஒப்பிடுதல்.

  • கல்வி, பயணம் அல்லது ஓய்வூதியம் போன்ற குறிப்பிட்ட நிதி இலக்குகளை அடைய முதலீடுகளை திட்டமிடுதல்.

  • மேனுவல் கணக்கீட்டு பிழைகளைத் தவிர்ப்பது.

FD கால்குலேட்டரை பயன்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்?

Answer

FD கால்குலேட்டரை பயன்படுத்த சில நிமிடங்களே ஆகும். முடிவுகளை உடனடியாகப் பெற, நீங்கள் டெபாசிட் தொகை, கால அவகாசம், வங்கி அல்லது நிதி நிறுவனம் வழங்கும் FD வட்டி விகிதம் மற்றும் கூட்டு (காம்பவுண்டிங்) இடைவெளி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

FD வட்டி கால்குலேட்டரை பயன்படுத்துவது இலவசமா?

Answer

ஆம். வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் வழங்கும் FD வட்டி கால்குலேட்டர்கள் பொதுவாக இலவசமாக பயன்படுத்தக்கூடியவை.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail