நுழைவின் போது வயது
- Question
- நுழைவின் போது வயது
- Answer
-
- குறைந்த பட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 65 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
5 முதல் 30 ஆண்டுகள். ரைடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலம், ரைடர் இணைக்கப்பட்டுள்ள பேஸ் பிளானுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தை விட குறைவாகவோ அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும்.
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
ஒரு ரைடர் என்பது எந்தவொரு அடிப்படை காப்பீட்டு திட்டத்திற்கும் கிடைக்கின்ற ஒரு ஆட்-ஆன் பலன் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கவரேஜுக்கும் மேலாக இந்தியாஃபர்ஸ்ட் டெர்ம் ரைடர் திட்டமானது ஆயுள் காப்பீட்டுதாரருக்கு கூடுதல் ஆயுள் காப்பீட்டுக் கவரேஜை வழங்குகிறது. ஆயுள் காப்பீட்டுதாரரின் எதிர்பாராத இறப்பு ஏற்பட்டால், அடிப்படை திட்டத்தின் கீழ் ஏதேனும் இறப்புப் பலன்களுடன் ரைடரின் கீழ் காப்பீட்டுத் தொகையை நாமினி பெறுவார்.
ரெகுலர் பிரீமியம் | சிங்கிள் பிரீமியம் |
---|---|
5 முதல் 30 ஆண்டுகள் | 5 முதல் 30 ஆண்டுகள் |
தேர்ந்தெடுக்கப்பட்ட காலமானது ரைடர் பாலிசி இணைக்கப்பட்டுள்ள அடிப்படை பாலிசி காலத்திற்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச உத்தரவாதத்தொகை | அதிகபட்ச உத்தரவாதத் தொகை |
---|---|
Rs 1,00,000 | Rs 20,00,00,000 |
*ஆயுள் காப்பீடு ரூ .1,000 இன் மடங்குகளில் இருக்க வேண்டும். இந்தியாஃபர்ஸ்ட் டெர்ம் ரைடரின் கீழ் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை அடிப்படை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடிப்படை காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது.
அதிகபட்ச முதிர்வு வயது உங்கள் கடைசி பிறந்தநாளின்படி 70 வயதை தாண்டக் கூடாது அல்லது அடிப்படைத் திட்டத்தின் கீழ் முதிர்வு வயது, ஆக இவ்விரண்டில் எது குறைவோ அதுவே அதிகபட்ச முதிர்வு வயதாகும்.
பாலிசிக்கான தகுதி வரம்பு பின்வருமாறு-
திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச வயது | திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வயது |
---|---|
18 ஆண்டுகள் | 65 ஆண்டுகள் |
நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களின்படி செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மற்றும் பெறக்கூடிய பலன்கள் மீது நீங்கள் வரிச் சலுகைகள் பெறுவீர்கள். வருமான வரிச் சட்டம் 1961 இன்படி இவை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை கலந்தாலோசியுங்கள்.
அடிப்படை பாலிசி காலாவதியாகிவிட்டால், ரைடர் பாலிசி நிறுத்தப்படும். கருணைக் காலம் முடிவதற்கு முன்னர் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியங்களை செலுத்தாவிட்டால், உங்கள் காப்பீடு காலாவதியாகிவிடும். முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் தவணை தேதியிலிருந்து வட்டி / தாமத கட்டணங்களுடன் நிலுவையில் உள்ள பிரீமியத்தை செலுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பாலிசியை புதுப்பிக்கலாம்.
உங்கள் காலாவதியான பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம், நீங்கள் அதை நான்-லிங்க்ட் திட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்குள்ளும், லிங்க்ட் திட்டங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்குள்ளும் முதல் செலுத்தப்படாத வழக்கமான பிரீமியம் கெடு தேதியிலிருந்து ஆனால் முதிர்வு தேதிக்கு முன்னர் நீங்கள் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த புதுப்பித்தல் நிறுவனத்தால் கோரப்படும் திருப்திகரமான மருத்துவ மற்றும் நிதித் தேவைகளுக்கு உட்பட்டது. மருத்துவச் செலவு, ஏதேனும் இருந்தால், அதை நீங்கள் ஏற்க வேண்டும். புதுப்பித்தல் காலஅவகாசம் முடிவடைவதற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், பாலிசி நிறுத்தப்படும், மேலும் நீங்கள் எந்த பலன்களையும் பெற உரிமை பெற மாட்டீர்கள்.
ரெகுலர் பிரீமியம் | சிங்கிள் பிரீமியம் |
---|---|
மாதாந்திரம் (ECS அல்லது நேரடி டெபிட் மூலம்), அரையாண்டு, வருடாந்திரம் | ஒரு முறை பணம் செலுத்தல் மட்டுமே |
அடிப்படை திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைவெளிகளின்படி ரைடர் பிரீமியங்கள் செலுத்தப்பட வேண்டும். அரையாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்களுக்கான பின்வரும் பிரீமியம் கால இடைவெளி காரணிகள் வருடாந்திர பிரீமியங்களில் பயன்படுத்தப்படும்.
பிரீமியம் கால இடைவெளி | வருடாந்திர பிரீமியத்திற்கு பயன்படுத்த வேண்டிய காரணி |
---|---|
ஆறுமாதம் | 0.5119 |
மாதாந்திர | 0.0870 |
ஃப்ரீ லுக் காலத்திற்குள் உங்கள் பாலிசியை நீங்கள் திருப்பித் தரலாம்;
ஏதேனும் பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஒருமுறை திரும்பப் பரிசீலிப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் அந்த விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் ஏற்கவில்லை என்றால், பாலிசியைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு பாலிசியை எங்களிடம் திருப்பி அனுப்பலாம். தொலைதூர மார்க்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் முறை மூலம் வாங்கிய பாலிசிகளுக்கான ஃப்ரீ லுக் காலம் 30 நாட்கள் ஆகும்.
உங்கள் பாலிசியை திருப்பித் தரும்போது உங்களுக்கு ஏதேனும் ரீஃபண்ட் கிடைக்குமா?
ஆம். நீங்கள் செலுத்திய பிரீமியத்திற்கு சமமான தொகையிலிருந்து பின்வருவனவற்றை கழித்து மீதித்தொகையை நாங்கள் திருப்பித் தருவோம்
கழிக்க i. பாலிசி செயல்பாட்டில் இருந்த காலத்திற்கு புரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் மற்றும் ரைடர் பிரீமியம் ஏதேனும் இருந்தால்.
கழிக்க ii. செலுத்தப்பட்ட ஏதேனும் முத்திரை வரி.
கழிக்க iii. மருத்துவ பரிசோதனைக்கு ஏதேனும் செலவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தொகை.
சலுகைக்கு தடை: அவ்வப்போது திருத்தப்பட்ட காப்பீட்டு சட்டம், 1938 பிரிவு 41 சொல்கிறது:
இந்தியாவில் ஆயுள் அல்லது சொத்து தொடர்பான எந்த வகையான ஆபத்துகள் தொடர்பாகவும் காப்பீட்டை எடுக்க அல்லது புதுப்பிக்க அல்லது தொடர எந்தவொரு நபருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தூண்டுதலாக, செலுத்த வேண்டிய கமிஷன் முழுவதிலும் அல்லது பகுதியளவில் ஏதேனும் சலுகை அல்லது பாலிசியில் காட்டப்பட்டுள்ள பிரீமியத்தில் ஏதேனும் சலுகை ஆகியவற்றை எந்தவொரு நபரும் அனுமதிக்கவோ அல்லது அனுமதிக்க செய்யவோ கூடாது. அத்தகைய சலுகைகள் காப்பீட்டாளரின் வெளியிடப்பட்ட தகவலறிக்கை அல்லது அட்டவணைகளின்படி மட்டுமே அனுமதிக்கப்படும்
வரம்புரையாக காப்பீட்டு முகவர் ஒருவர் தனது பெயரில் எடுத்த ஆயுள் காப்பீட்டு பாலிசி தொடர்பாக கமிஷன் ஏற்றுக்கொள்வது மற்றும் அத்தகைய ஏற்பு நேரத்தில் காப்பீட்டு முகவர் அவர் காப்பீட்டாளரால் பணியமர்த்தப்பட்ட ஒரு நேர்மையான காப்பீட்டு முகவர் என்பதை நிறுவும் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் இந்த உட்பிரிவின் அர்த்தத்திற்குள் பிரீமியத்தில் சலுகையை ஏற்றுக்கொள்வதாக கருதப்படாது,
இந்த பிரிவின் விதிமுறைக்கு இணங்கத் தவறும் எந்தவொரு நபருக்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.indiafirstlife.com என்ற எங்கள் வலைத்தளத்தைப் பார்க்கவும்.
பாலிசி காலத்துக்குள் ஆயுள் காப்பீட்டுதாரரின் எதிர்பாராத இறப்பு ஏற்படும் பட்சத்தில், இந்தியாஃபர்ஸ்ட் டெர்ம் ரைடரின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கு சமமான மொத்த தொகையை நாமினி பெறுவார்.
இந்த ரைடரின் கீழ் முதிர்வு அல்லது சர்வைவல் பலன் எதுவும் வழங்கப்படாது.
பாலிசி காலாவதியாவதைத் தவிர்ப்பதற்காக செலுத்த வேண்டிய தேதிகளில் அல்லது அதற்கு முன்னர் பிரீமியங்களைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில், மாதாந்திர அடிப்படையில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து 15 நாட்களும் மற்றும் பிற முறையில் பிரீமியம் செலுத்துகிறீர்கள் எனில் 30 நாட்களுக்குக் குறையாமலும் கருணைக் காலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
இந்த கருணை காலத்தில் உங்களின் அனைத்து காப்பீட்டுப் பலன்களும் தொடரும் என்பதுடன் காப்பீடு செயல்பாட்டில் இருப்பதாகக் கருதப்படும்.
பாலிசியின் கீழ் ஆபத்து தொடங்கிய நாளிலிருந்து அல்லது பாலிசியின் புதுப்பித்தல் தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் தற்கொலை காரணமாக இறப்பு ஏற்பட்டால், பாலிசி செயல்பாட்டில் இருந்தால், பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளி இறந்த தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களில் 80% அல்லது இறப்பு தேதியின்படி கிடைக்கக்கூடிய சரண்டர் மதிப்பு ஆக இதில் எது அதிகமோ அத்தொகையைப் பெற தகுதி பெறுகிறார்.
மோசடி, தவறான அறிக்கை ஆகியவற்றிற்கு அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன், பிரிவு 45 இன்படி தீர்க்கப்படும்,
அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன், பிரிவு 45 சொல்கிறது
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் ரிடையர்மெண்ட் பிளான் மூலம் மன அழுத்தமில்லாத ஓய்வூதியத்தைக் கண்டறியவும். இது உங்கள் நிதியை கட்டியெழுப்ப உறுதியான வருமானத்தை உறுதியளிக்கிறது மற்றும் உங்கள் வழியை மேலும் சேமிக்க உதவுகிறது. கூடுதல் பலன்கள் மற்றும் வரிப் பலன்களுடன் உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மட்டுமின்றி, செல்வத்தை உருவாக்கவும் உதவும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான் மூலம் 1 திட்டத்தில் 2 பலன்களை அனுபவிக்கவும்.
அனைத்தையும் பார்க்கவும்