விதிமுறைகளின்படி, , டெத் பெனிஃபிட், உரிமை பெனிஃபிட் மற்றும் சரண்டர் நன்மைகளைப் பெறுவதற்கான ஆப்ஷன்கள் உங்களிடம் உள்ளன.
இந்த நன்மைகளை நீங்கள் பின்வரும் முறைகளில் பெறலாம்:
– டெத் பெனிஃபிட் பெற்றால், நாமினிக்கு பின்வரும் ஆப்ஷன்கள் வழங்கப்படும்::
பாலிசியின் முழு வருமானத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ, அப்போதைய நடைமுறையில் உள்ள விகிதத்தில், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்திடமிருந்து உடனடி ஆண்டுத்தொகை (அன்யூட்டி) அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகை (டிஃபெர்டு அன்யூட்டி) வாங்குவதற்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், நாமினிக்கு, அப்போதைய நடைமுறை விகிதத்தில், மற்றொரு இன்சூரர் நிறுவனத்திடமிருந்து உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்குவதற்கான ஆப்ஷனும் வழங்கப்படும். இந்த வாய்ப்பு, பாலிசியின் மொத்த வருமானத்திலிருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையைக் கழித்த பின், அதில் 50% வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்சம் 60% ஆக இருப்பதால், பிற இன்சூரர்களிடமிருந்து ஆண்டுத்தொகை வாங்குவதற்கான உத்தரவாத தொகை மொத்த வருமானத்தில் 20% ஆகும்; அல்லது
i) பாலிசியின் முழு வருமானத்தையும் திரும்பப் பெறுதல்.
வெஸ்டிங் பெனிஃபிட் பொறுத்து, பாலிசிதாரருக்கு பின்வரும் ஆப்ஷன்கள் உண்டு:
i) கீழே உள்ள புள்ளி எண் (iii)க்கு உட்பட்டு, நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்பிலிருந்து உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்குவதற்காக, முழு வருமானத்தையும் பயன்படுத்துதல்; அல்லது
ii) கீழே உள்ள புள்ளி எண் (iii)க்கு உட்பட்டு, நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்பிலிருந்து உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை (டிஃபெர்டு அன்யூட்டி) வாங்க, 60% வரை பரிமாற்றம் செய்து, மீதமுள்ள தொகையைப் பயன்படுத்துதல்;iii) ஒவ்வொரு பாலிசிதாரருக்கும், மற்றொரு இன்சூரரிடமிருந்து, அப்போது நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில், உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்குவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். இந்த ஆப்ஷன், பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையை கழித்த பின், பாலிசியின் மொத்த வருமானத்தில் 50% வரை மட்டுமே செல்லுபடியாகும் (பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட அதிகபட்சம் 60%). எனவே, மற்ற இன்சூரரிடமிருந்து ஆண்டுத்தொகையை வாங்குவதற்காகக் கிடைக்கும் தொகை மொத்த வருமானத்தில் 20% ஆகும்
சரண்டர் நன்மைகள் பொறுத்தவரையில், பாலிசிதாரருக்கு பின்வரும் ஆப்ஷன்கள் உள்ளன:
i) கீழே உள்ள புள்ளி எண் (iii)க்கு உட்பட்டு, நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்பிலிருந்து உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்க, முழு வருமானத்தையும் பயன்படுத்துதல்; அல்லது
ii) கீழே உள்ள புள்ளி எண் (iii)க்கு உட்பட்டு, நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்திடமிருந்து உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்குவதற்காக, 60% வரை பரிமாற்றம் செய்து, மீதமுள்ள தொகையைப் பயன்படுத்துதல்; அல்லது
iii) ஒவ்வொரு பாலிசிதாரருக்கும், மற்றொரு இன்சூரரிடமிருந்து, அப்போது நடைமுறையில் உள்ள ஆண்டுத்தொகை விகிதத்தில், உடனடி அல்லது ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத்தொகையை வாங்குவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். இந்த ஆப்ஷன், பரிமாற்றத்திற்குப் பிறகு, பாலிசியின் மொத்த வருமானத்தில் 50% வரை மட்டுமே செல்லுபடியாகும் (பரிமாற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு 60%). எனவே, மற்ற இன்சூரரிடமிருந்து ஆண்டுத்தொகை வாங்கக்கூடிய உத்தரவாதத் தொகை, மொத்த வருமானத்தின் 20% ஆகும்.
ஒற்றை பிரீமியம்: பிரீமியம் பேமென்ட்டுக்கு பிறகு எந்த நேரத்திலும் சரண்டர் வேல்யூ உடனடியாக வழங்கப்படும். பாலிசிதாரருக்கு தனது பாலிசியை சரண்டர் செய்யும் ஆப்ஷன் உண்டு.
சரண்டர் அல்லது உரிமை பெற்றபோது பாலிசியின் வருவாய் குறைந்தபட்ச ஆண்டுதொகை (மாதத்திற்கு ரூ. 1000) வாங்க போதுமானதல்ல என்றால், அந்த வருவாயை பாலிசிதாரருக்கு அல்லது பயனாளிக்கு ஒருமுறைத் தொகையாக வழங்கலாம்.