மோசடி, தவறான தகவல் அளித்தல் மற்றும் பறிமுதல் ஆகியவைகு, அவ்வப்போது திருத்தப்படும் இன்சூரன்ஸ் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன் விதிமுறைகளின்படி கையாளப்படும். வழக்காட முடியாத தன்மை பற்றிய பிரிவு: அவ்வப்போது திருத்தப்படும் இன்சூரன்ஸ் சட்டம் 1938 இன் பிரிவு 45ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
1) பாலிசி தேதி, (அதாவது பாலிசி வழங்கப்பட்ட தேதி) அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் மீட்டெடுப்புத் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு எந்தவொரு காரணத்திற்காகவும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கேள்விக்கு உட்படுத்தப்படாது.
2) மோசடி காரணத்துக்காக, பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் மீட்டெடுப்புத் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆயுள் லைஃப் இன்சூரன்ஸ் கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய முடிவுக்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
3) துணைப்பிரிவு (2) இல் என்ன குறிப்பிட்டிருந்தாலும் சரி, பாலிசிதாரர் ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது தனது அறிவிற்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் தான் உண்மை என நம்பியதாக நிரூபிக்க முடிந்தால் அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைக்க வேண்டும்m என்ற எந்த நோக்கமும் இல்லை என நிரூபிக்க முடிந்தால் அல்லது ஒரு முக்கியமான உண்மையை மாற்றிக் கூறியது அல்லது மறைத்தது காப்பீட்டாளருக்குத் தெரிந்திருந்தால், எந்தவொரு காப்பீட்டாளரும் ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை மோசடி காரணமாக நிராகரிக்க முடியாது,: மோசடி ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டால், பாலிசிதாரர் உயிருடன் இல்லாதபட்சத்தில், பயனாளிகளுக்கு அதை நிரூபிக்கும் பொறுப்பு உள்ளது.
4) காப்பீடு செய்யப்பட்டவரின் ஆயுட்காலம் தொடர்பாக ஏதேனும் தவறான அறிக்கையோ அல்லது உண்மையோ மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த அடிப்படையில் பாலிசி வழங்கப்பட்டது அல்லது மீட்டெடுக்கப்பட்டது அல்லது ரைடர் வழங்கப்பட்டது எனில், பாலிசி வழங்கப்பட்ட தேதி அல்லது ஆபத்து தொடங்கிய தேதி அல்லது பாலிசியின் மீட்டெடுப்புத் தேதி அல்லது பாலிசியின் ரைடர் தேதி ஆக இவற்றில் எது கடைசியாக நிகழ்கிறதோ அத்தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கேள்விக்குள்ளாக்கப்படலாம். அத்தகைய பட்சத்தில், பாலிசிதாரர் அல்லது அவரது சட்ட பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை நிராகரிக்க முடிவெடுப்பதற்கு அடிப்படையாக உள்ள தகவல் மற்றும் காரணங்கள் குறித்து காப்பீட்டு வழங்குநர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். மேலும் மோசடி என்ற அடிப்படையில் அல்லாமல் தவறான அறிக்கை அல்லது ஒரு முக்கிய உண்மையை மறைத்தல் என்ற அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிராகரிக்கப்பட்ட தேதி வரைக்கும் பாலிசியில் வசூலிக்கப்பட்ட பிரீமியங்கள், பாலிசிதாரருக்கு அல்லது அவரின் சட்டபூர்வ பிரதிநிதிகள் அல்லது நாமினிகள் அல்லது நியமனதாரர்களுக்கு அத்தகைய நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.
5) காப்பீட்டாளர் எந்த நேரத்திலும் வயதுச் சான்றைக் கோருவதை இந்த பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது. மேலும் காப்பீடு செய்யப்பட்டவரின் வயது முன்மொழிவில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிற்காலத்தில் நிரூபிக்கப்படுவதன் விளைவாக, பாலிசியின் விதிமுறைகளில்ல் திருத்தம் செய்யப்படுவதால் மட்டும், எந்தவொரு பாலிசியும் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் கருதப்படாது.