Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

நாங்கள் நம்பிக்கையின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளோம்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, ₹754.37 கோடி செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்துடன், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (IndiaFirst Life) இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தனியார் ஆயுள் காப்பீட்டாளர்களில் ஒன்றாகும். எங்களின் முக்கிய வேறுபாடுகள், எளிமையான மற்றும் புரிந்துகொள்ள எளிதான, உகந்த விலையுள்ள காப்பீட்டுத் திட்டங்களாகும்.

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பேங்க் ஆஃப் பரோடாவின் உள்நாட்டு துணை நிறுவனமாகும். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நவம்பர் 2009 இல், தனியார் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 22வது நிறுவனமாக உருவானது. மார்ச் 31, 2025 நிலவரப்படி, அதன் புதிய பிசினஸ் இண்டிவீஜ்வல் ரீட்டெய்ல் பிரீமியம் ₹1,425 கோடியாகவும், மொத்த பிரீமியம் ₹7,218 கோடியாகவும் இருந்தது. இன்று, இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ், இந்தியாவின் 90%+ அஞ்சல் குறியீடுகளில் பரவியுள்ள 16 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்தியாஃபர்ஸ்ட் இந்தியா முழுவதும் ~4,600 பேர் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. இது ~22,000 கூட்டாளர் கிளைகள் மற்றும் ~115 மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர்கள் மற்றும் கார்ப்பரேட் முகவர்கள் அடங்கிய வலுவான நெட்வொர்க்கையும் கொண்டுள்ளது, இது இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் உள்ளடக்கியது. இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் ~1,880 முகவர்களைக் கொண்ட வலுவான நெட்வொர்க்கையும் உருவாக்கி எங்களின் விநியோக சுற்றுச்சூழல் அமைப்பை நிறைவு செய்கிறது.

எங்களின் ஆரம்பகால பங்குதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடா, ஆந்திரா வங்கி (இப்போது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா), மற்றும் லீகல் & ஜெனரல் மிடில் ஈஸ்ட் லிமிடெட். பிப்ரவரி 2019 இல், லீகல் & ஜெனரல் தனது பங்குகளை, இந்தியாவின் சட்டங்களின் கீழ் இணைக்கப்பட்ட ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமான மற்றும் வார்பர்க் பிங்கஸ் குழுமத்தின் துணை நிறுவனமான கார்மல் பாயிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு விற்றது. ஏப்ரல் 2020 இல், ஆந்திரா வங்கி யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. எங்கள் தற்போதைய பங்குதாரர் முறை பின்வருமாறு:

பேங்க் ஆஃப் பரோடா – 65%

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா  – 9%

கார்மல் பாயிண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் – 26%

about-us-image2

வித்தியாசம் அனுபவம் தான்

செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி, நாங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 30 ரீடெய்ல் தயாரிப்புகள், 13 குழு தயாரிப்புகள் மற்றும் 6 ரைடர்களை (ரீடெய்ல் மற்றும் குழு போர்ட்ஃபோலியோ க்கள்ஆகியவற்றில்) வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் ஓய்வூதிய தேவைகளைப் பூர்த்தி  செய்வதற்கு வழங்கினோம்.பல விநியோகத் திறன்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று மற்றும் பல்வேறு முதலீட்டு விருப்பத்தேர்வுகளை .மேம்படுத்துவதோடு நாங்கள் PMJJBY திட்டத்தின் கீழும் பாலிசிகளை வழங்குகிறோம்

பின்வரும் வகைகளில்முழுமையான சலுகைகளை நாங்கள் வழங்குகிறோம்: பார்ட்டிசிபேட்டிங் பிளான்கள், நான்- பார்ட்டிசிபேட்டிங் சேவிங்ஸ் பிளான்கள், நான்- பார்ட்டிசிபேட்டிங் புரொடெக்‌ஷன் பிளான்கள், யூனிட் லிங்க்ட் இன்சூரன்ஸ் பிளான்கள், குரூப் புரொடெக்‌ஷன் பிளான்கள், கார்ப்பரேட் ஃபண்ட்ஸ் பிளான்கள், ரைடர்கள் மற்றும் PMJJBY. இந்தப் பிரிவுகள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிர்கொள்ள தயாராக இருக்க உதவும் ஒரு விரிவான தாயாரிப்புகளின் தொகுப்பை உருவாக்குகின்றன. எங்கள் புரிந்துகொள்ள புரிந்து கொள்ள எளிதானவை மற்றும் உகந்த விலையில் உள்ளன மேலும் ஒரு வளர்ச்சியடைந்த விரிவான இடர் மேலாண்மை கட்டமைப்பு/பாலிசி கொண்டுள்ளன. பலவிதமான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்ய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

பணியாளர்களே முதன்மை

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில், எங்கள் கலாச்சாரம் வெறும் அறிக்கை மட்டுமல்ல - அது ஒரு வினைச்சொல், எங்கள் அன்றாட வாழ்க்கையின் உயிருள்ள மற்றும் சுவாசிக்கும் ஒரு பகுதி என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் பணியாளர்கள் நாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையத்தில் இருக்கிறார்கள், மேலும் அவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு எங்களின் வெற்றியை உறுதிபடுத்துகின்றன. எங்களின் #EmployeeFirst என்ற அடிப்படைக் கொள்கையால் வழிநடத்தப்பட்டு, மகிழ்ச்சியான, ஆர்வமுள்ள மற்றும் இணைக்கப்பட்ட ஒரு பணி கலாச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து வளர்த்து வருகிறோம்.

எங்களின் எம்ப்ளாயி வேல்யூ ப்ரொபோசிஷன் (EVP) ஒரு ஊழியர் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கும் மற்றும் அவர்களுக்கு திரும்பி கிடைப்பதற்கும் இடையிலான சமநிலையாக நாங்கள் வரையறுக்கிறோம். ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தின் மதிப்புகளான - புதிய சிந்தனை, உறுதுணையாக இருத்தல், நேர்மையாக இருத்தல் மற்றும் கூடுதலாகச் செய்தல் - ஆகியவற்றை உயிர்ப்பிக்கிறார்கள், அதற்கு ஈடாக, அவர்கள் C.A.R.E. (பணியாளர்களை மற்றும் வெற்றியை கொண்டாடுதல், வளர்ச்சியை துரிதப்படுத்துதல், சாதனைகளை அங்கீகரித்தல், மற்றும் ஊழியர்களுக்கு அதிகாரம் அளித்தல்) அனுபவிக்கிறார்கள். இந்தக் கொள்கைகள்தான் எங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையை உருவாக்குகின்றன மற்றும் ஒவ்வொரு முயற்சியிலும், கொள்கை மற்றும் தொடர்புகளிலும் பிரதிபலிக்கின்றன.

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக Great Place to Work® என சான்றளிக்கப்பட்டது மற்றும் 2025 இல் BFSI இல் இந்தியாவின் சிறந்த பணியிடங்களில் முதல் 50 இடங்களில் இடம்பெற்றது. இதற்கு எங்களின் அற்பணிப்பில் அசைக்க முடியாத அடிப்படைக் கொள்கைகளான #CustomerFirst மற்றும் #EmployeeFirst ஆகிவற்றிற்கு நன்றி.

எங்கள் பணியாளர்களுக்கான முன்முயற்சிகள் நோக்கம் மற்றும் தாக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன - பணியமர்த்தல் முதல் திறன் மேம்பாடு வரை, ஈடுபாடு முதல் அதிகாரமளித்தல் வரை:
எட்டு கட்டளைகள்: அன்றாட வழிகாட்டும் கொள்கைகளாக எங்களின் கட்டளைகள் செயல்படுகின்றன, ஊழியர்களுக்கு உரிமை எடுத்துக்கொள்ள, தீர்மானமாக இருக்க மற்றும் சரியான நோக்கம் மற்றும் திறம்பட செய்துமுடிக்க அதிகாரம் அளிக்கின்றன. பணியமர்த்தலுக்கு முந்தைய மதிப்பு பொருத்த மதிப்பீடுகள்: தனித்துவமான உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, வருங்கால ஊழியர்களை முதல் நாளிலிருந்தே எங்கள் கலாச்சாரத்துடன் நாங்கள் சீரமைக்கிறோம்.
Amber, எங்கள் AI சாட்போட்: ஊழியர்களின் கருத்துகள், உணர்வுகள் மற்றும் போக்குகளை நாங்கள் சேகரிக்கிறோம், இது ஊழியர்களின் மனநிலையை முன்கூட்டியே மேம்படுத்த உதவுகிறது. ஊழியர்கள் தங்கள் கவலைகளை எங்கள் CHRO உடன் அடையாளம் மறைத்து சாட்போட் மூலம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளனர் - இது நம்பிக்கை மற்றும் உளவியல் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

ஊழியர் அங்கீகாரம்: எங்கள் முதன்மை திட்டங்களான AchieversFirst மற்றும் ValuesFirst ஆகியவையின் மூலம் எங்களின் அடிப்படைக் கொள்கைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக வியப்பிற்குரிய தேசிய மற்றும் சர்வதேச பயணங்களுடன் கொண்டாடுகிறோம், அங்கீகாரத்தை ஒரு அர்த்தமுள்ள மற்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறோம். கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பு நாங்கள் முன்னெடுக்கும் எல்லாவற்றிலும் இருப்பதை உறுதிசெய்கிறோம். PRIME, RISE மற்றும் N-E-X-T போன்ற திட்டங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் தலைமைத்துவ திறன் மற்றும் பணியில் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நாங்கள் சான்றிதழ்கள், வழிகாட்டுதல் காலங்கள் மற்றும் நிகழ்நேர விற்பனை பயிற்சி கருவிகள் போன்றவற்றில் முதலீடு செய்கிறோம். DART மற்றும் ECHO போன்ற எங்கள் தளங்கள் நிகழ்நேர செயல்திறனை காண்பித்து ஊழியர் தலைமையிலான கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன.
எங்கள் DEIB கட்டமைப்பையும் மேம்படுத்தியுள்ளோம், பணியமர்த்தல், கற்றல், கொள்கை உருவாக்கம் மற்றும் கொண்டாட்டங்களில் உள்ளடக்கிய நடைமுறைகளை உட்பொதித்துள்ளோம். ஒவ்வொரு பதவி, செயல்பாடு மற்றும் மட்டத்திலும் சமபங்கு மற்றும் உளவியல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில், பணியாளரின் செயல்திறனை #EmployeeFirst நடைமுறைகளுடன் தொடர்ந்து சமநிலைப்படுத்துகிறோம், ஒவ்வொரு ஊழியருக்கும் முன்னேறவும், அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும், மற்றும் ஒரு வலுவான நோக்கம் மற்றும் உணர்வை உணரவும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்கிறோம். இது வெறும் பணியிடம் மட்டுமல்ல - கலாச்சாரம் இங்கு வியூகத்தை இயக்கும் மற்றும் பணியாளர் இங்கு வெற்றியை இயக்குவார்.

about-us-image2
about-us-image2

வாடிக்கையாளருக்கே முதலிடம் கோட்பாடு

எங்கள் #CustomerFirst கோட்பாட்டில் இருந்து உருவான முழுமையான மதிப்புச் சங்கிலி முழுவதும் முன்னணி டிஜிட்டல் மயமாக்கல் முன்னெடுப்புகள் மூலம் மதிப்பை வழங்குகிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை நடத்தும் கோட்பாட்டை, நாங்கள் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதற்கான ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படுகிற எங்கள் "நம்பிக்கை வட்டம்" முன்மொழிவு மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்: ஒவ்வொரு நடத்தையும் நம்பிக்கையைப் பெறுவதற்கான நோக்கத்தினால் வழிநடத்தப்படுகிறது.

உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் எதிர்நோக்குகிறோம் மற்றும்

நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.

**குறிப்பு: தரவரிசை யானது தனியார் துறையைப் பொறுத்ததாகும் (எல்ஐசி தவிர).

about-us-image2

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail