உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, 30களை சேர்ந்த நபர்களைப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. அது அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காகவோ, பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்காகவோ இருந்தாலும் சரி,டெர்ம் இன்சூரன்ஸ் 30களை சேர்ந்த நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு
உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதாகும். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் நீங்கள் நுழையும்போது, குழந்தையை வளர்ப்பது, வீட்டுச் செலவுகளை நிர்வகிப்பது மற்றும் கடன்களை அடைப்பது போன்ற பொறுப்புகள் முதன்மையான முன்னுரிமைகளாக மாறும். ஒரு குடும்ப டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு ஏதாவது நடந்தால் உங்கள் அன்புக்குரியவர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
விலை குறைந்த பிரீமியங்கள்
உங்கள் 30களில் பிரீமியங்கள் உங்கள் 20களில் உள்ளவர்களை விட சற்று அதிகமாக இருந்தாலும், உங்கள் 40கள் அல்லது 50கள் வரை காத்திருப்பதோடு ஒப்பிடும்போது அவை இன்னும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் உள்ளன. உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தைப் வாங்குது நீண்ட கால கவரேஜைப் பாதுகாக்கும் அதேசமயம் குறைந்த பிரீமியங்களிலிருந்து பயனடைய உங்களை அனுமதிக்கிறது.
பெண்களுக்கான நிதி பாதுகாப்பு
30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு, டெர்ம் இன்சூரன்ஸ் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு அத்தியாவசிய நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது, இதனால் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடியும். பெண்களுக்கான டெர்ம் இன்சூரன்ஸ் நீண்ட ஆயுட்காலம் காரணமாக குறைந்த பிரீமியங்களை வழங்க முடியும் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட கவரேஜ் விருப்பத்தேர்வுகளை உள்ளடக்கியது.
மாற்று வருமானம்
உங்கள் 30கள் பொதுவாக வருமான வளர்ச்சியின் காலமாகும், எனவே உங்கள் வருவாய் திறனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் ஒரு பாதுகாப்பாகச் செயல்படும், உங்கள் குடும்பம் அடமானத்திற்கு பணம் செலுத்துதல் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் போன்ற நிதிசார்ந்த கடமைகளை நீங்கள் இல்லாத சமயங்களிலும் தொடர்ந்து பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.
கவரேஜில் இலகுத்தன்மை
உங்கள் நிதி இலக்குகள் மற்றும் வாழ்க்கை முறைக்கு பொருந்தக்கூடிய இலகுவான கவரேஜ் விருப்பத்தேர்வுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தாலும் சரி அல்லது சுயதொழில் செய்பவராக இருந்தாலும் சரி, டெர்ம் இன்சூரன்ஸ் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படலாம். உதாரணமாக, சுயதொழில் செய்பவர்களுக்கான டெர்ம் இன்சூரன்ஸ் கவரேஜ் விருப்பத்தேர்வுகளை வழங்க முடியும், அது ஒழுங்கற்ற வருமான முறைகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது, உங்கள் குடும்பம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.
வரிப் பலன்கள்
மற்ற பாலிசிகளைப் போலவே, டெர்ம் இன்சூரன்ஸ் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் செலுத்தும் பிரீமியங்களை உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்க முடியும், இது மதிப்புமிக்க கவரேஜைப்பெறுவதோடு வரிகளைச் சேமிக்கவும் உதவுகிறது.
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள் 30களை சேர்ந்த நபர்களுக்குக் கிடைக்கும்
சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பிரீமியங்கள் மற்றும் கவரேஜ் கால அளவை சிறப்பாகப் பெற உதவும். கருத்தில் கொள்ள பொதுவாக கிடைக்கக்கூடிய சில விருப்பத்தேர்வுகள் இங்கே உள்ளன.
லெவல் டெர்ம் இன்சூரன்ஸ்
பாலிசி காலம்முழுவதும் கவரேஜ் அளவு ஒரே மாதிரியாக இருக்கும் டெர்ம் இன்சூரன்ஸின் மிகவும் பொதுவான வகை இதுவாகும். இது 30களை சேர்ந்த நபர்களுக்கு ஏற்றது, ஏனெனில் இது நிலையான பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் அடமானங்கள் அல்லது கல்விச் செலவுகள் போன்ற பெரிய நிதிப் பொறுப்புகளை ஈடுகட்ட உதவுகிறது.
அதிகரிக்கும் டெர்ம் இன்சூரன்ஸ்
இத்திட்டத்தின் மூலம், காப்பீட்டுத் தொகை சீரான இடைவெளியில் அதிகரிக்கிறது, காலப்போக்கில் தங்கள் நிதிக் கடமைகள் உயரும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு நல்ல விருப்பத்தேர்வு . உங்கள் குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும் போது, பணவீக்கம் மற்றும் வளர்ந்து வரும் செலவுகளுக்கு ஏற்ப உங்கள் கவரேஜை வைத்திருப்பதை இது உறுதி செய்கிறது.
குறையும் டெர்ம் இன்சூரன்ஸ்
இந்த வகை திட்டம் பெரும்பாலும் கடன்கள் போன்ற குறிப்பிட்ட நிதிப் பொறுப்புகளை ஈடுகட்டப் பயன்படுகிறது. குறையும் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் காப்பீட்டுத் தொகையானது காலப்போக்கில் குறைந்து வரும் கடன் அல்லது அடமானத்திற்கு ஏற்ப, 30 வயதுகளில் பெரிய கடன்களை அடைக்க விரும்பும் நபர்களுக்கு இது ஒரு விலை குறைந்த விருப்பத்தேர்வாக அமைகிறது.
பிரீமியம் திரும்ப கிடைத்தல் உடனான டெர்ம் இன்சூரன்ஸ்
இந்த விருப்பத்தேர்வு பாரம்பரிய கால திட்டங்களைப் போலன்றி, பாலிசிதாரர் பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால்ல் செலுத்தப்பட்ட பிரீமியங்களைத் திரும்ப கிடைக்கச் செய்கிறது. இது மிகவும் விலையுயர்ந்த திட்டம், ஆனால் பாதுகாப்புக்கும் முதலீட்டிற்கும் இடையில் சமநிலையை நாடுபவர்களுக்கு, இது ஒரு கவர்ச்சிகரமான விருப்பத்தேர்வு ஆகும்.
ஜாயிண்ட் டெர்ம் இன்சூரன்ஸ்
இந்தத் திட்டம் உங்களையும் உங்கள் மனைவியையும் ஒரே பாலிசி திட்டத்தின்கீழ் உள்ளடக்கியது. தம்பதிகள் நிதிப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இது ஒரு செலவு குறைந்த வழியாகும், குறிப்பாக தம்பதிகள் இருவரும் நிதிப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டால்.
உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள் ஒரு முக்கியமான கொள்முதல் ஆகும். இதோ கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகள்.
கவரேஜ் தொகை
கடன்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் பிற எதிர்காலச் செலவுகள் போன்ற உங்கள் நிதிக் கடமைகளின் அடிப்படையில் பொருத்தமான கவரேஜைத் தீர்மானிக்கவும். உங்கள் நிதித் தேவைகளைப் பொறுத்து ஆரம்பத்தில் ₹50 லட்சம் டெர்ம் இன்சூரன்ஸ் அல்லது ₹1 கோடி டெர்ம் இன்சூரன்ஸைத் தேர்வுசெய்யவும். உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும் போது, போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய ₹1.5 கோடி, ₹2 கோடி அல்லது ₹5 கோடி டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம்.
பாலிசி காலம்
பாலிசி காலம் உங்கள் நீண்ட கால நிதி இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும். உங்கள் குழந்தைகள் நிதி ரீதியாக சுதந்திரம் அடையும் வரை அல்லது நீங்கள் குறிப்பிடத்தக்க கடன்களை அடைக்கும் வரை இந்தத் திட்டம் உங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். டெர்ம் இன்சூரன்ஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தி, உங்களின் பொறுப்புகளுக்குப் பொருந்த உங்கள் கவரேஜ் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை மதிப்பிடவும்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்கான ரைடர்கள்
ரைடர்கள் உங்கள் பாலிசியின் கவரேஜைமேம்படுத்தும் ஆட்-ஆன்கள். உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது, கடுமையான நோய், விபத்து இறப்பு அல்லது பிரீமியம் தள்ளுபடி போன்ற ரைடர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ரைடர்கள் இறப்புக்கு அப்பாற்பட்ட எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு, அதாவது பெரிய நோய்கள் அல்லது குறைபாடுகள் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி பாதுகாப்பை வழங்குகின்றன.
தொழில் மற்றும் உடல்நலம்
பிரீமியங்களை நிர்ணயிப்பதில் உங்கள் தொழில் மற்றும் உடல்நலம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. நீங்கள் அதிக ஆபத்துள்ள தொழிலில் பணிபுரிந்தால் அல்லது ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், உங்கள் பிரீமியங்கள் அதிகமாக இருக்கலாம். இருப்பினும், உங்கள் 30களில், இந்தக் காரணிகள் பொதுவாகக் குறைவான கவலையை ஏற்படுத்தக்கூடும், மேலும் நீங்கள் இன்னும் குறைந்த விலையில் விரிவான பாலிசியைப் பெறலாம்.
வெவ்வேறு பிரிவினர்களுக்கான சிறப்பு பரிசீலனைகள்
இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் போன்ற குறிப்பிட்ட பிரிவினர்களுக்கான, டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகள் அவர்களின் தனித்துவமான நிதி சூழ்நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இல்லத்தரசிகளுக்கான டெர்ம் இன்சூரன்ஸ், வீட்டில் இருக்கும் வாழ்க்கைத் துணைவர்களுக்கு நிதி கவரேஜ் வழங்குகிறது. இதேபோல், மூத்த குடிமக்கள் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி கவரேஜை வழங்கும் பாலிசிகளை பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எனது 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் பெற வேண்டுமா?
ஆம், உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்குவது அவசியமாகும். இது உங்கள் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறதுஅ மற்றும் அடமானங்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் பிற பொறுப்புகள் போன்ற வளர்ந்து வரும் பொறுப்புகளை நிர்வகிக்க உதவுகிறது.
உங்கள் டெர்ம் லைஃப் இன்சூரன்ஸுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்?
முதலீடு உங்கள் வருமானம் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு விரிவான பாதுகாப்பை உறுதி செய்ய, உங்கள் ஆண்டு வருமானத்தை விட 10-15 மடங்கு கவரேஜ் தொகையைத் தேர்ந்தெடுப்பது ஒரு பொதுவான விதியாகும்.
ஒரு டெர்ம் திட்டத்திற்கான சிறந்த கால அளவு என்ன?
ஒரு டெர்ம் திட்டத்திற்கான சிறந்த காலம், உங்கள் நிதி சார்புநிலை முடியும் வரை அல்லது குறிப்பிடத்தக்க நிதி பொறுப்புகள் திருப்பிச் செலுத்தப்படும் வரை நீடிக்க வேண்டும். 30களை சேர்ந்த நபர்களுக்கு 20-30 வருட பாலிசி காலம் பெரும்பாலும் பொருத்தமானது.
உங்கள் 30களில் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்துடன் ரைடர்களை வாங்க முடியுமா?
ஆம், கடுமையான நோய், விபத்து இறப்பு மற்றும் பிரீமியம் தள்ளுபடி போன்ற ரைடர்கள் உங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படலாம். நோய் அல்லது இயலாமை போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது இந்த ரைடர்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் முடியும்.
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது வரியைச் சேமிக்க உதவுமா?
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குவது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. செலுத்தப்படும் பிரீமியங்கள் உங்கள் வரி வருமானத்திலிருந்து கழிக்கப்படும், இது உங்கள் வரிகளைச் சேமிக்கவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.