Menu
close
ஒரு நிபுணரிடம் கேளுங்கள் arrow
search
mic
close-search

No results for

Check that your search query has been entered correctly or try another search.

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.

right-icon-placeholder
right-icon-placeholder
male male

ஆண்

male male

பெண்

male male

மற்ற

முக்கிய சிறப்பம்சங்கள் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் சிங்கிள் பிரீமியம் பிளான்

ஆயுள் காப்பீடு

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் சிங்கிள் பிரீமியம், 30 ஆண்டுகள் வரை இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கி, உங்களையும் உங்கள் பிரியமானவர்களையும் பாதுகாக்கிறது.

tax-benefit

ஒரு முறை பேமென்ட்

ஒருமுறை (சிங்கிள் பே) பேமென்ட் செலுத்துவதன் மூலம், பாலிசி காலம் முழுவதும் லைஃப் இன்சூரன்ஸ் பிளானுடன் உத்தரவாதமான நிதிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

tax-benefit

நெகிழ்வான பேஅவுட்(பணப்பெறுதல்) ஆப்ஷன்கள்

ஆயுள் காப்பீடு பெற்றவர் அகால மரணம் அடைந்தால், 5 ஆண்டுகள் வரை உத்தரவாதமான மொத்த தொகை அல்லது மாத வருமானம் போன்ற நன்மைகள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்கப்படும்.

tax-benefit

அதிக ஆயுள் காப்பீடு

நுழைவு வயது 45 வரை, சிங்கிள் பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு வரை இன்சூரன்ஸ் கவரேஜை தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

tax-benefit

உறுதியளிக்கப்பட்ட முதிர்வு நன்மை

உறுதியளிக்கப்பட்ட முதிர்வு நன்மை மூலம் கவலையின்றி நிம்மதியாக வாழுங்கள்.

tax-benefit

மேம்படுத்தப்பட்ட முதிர்வு நன்மை

அதிக பிரீமியம் பேண்டுகளுக்கு அதிக முதிர்வு நன்மைகளைப் பெறுங்கள்.

tax-benefit

ஆன்லைனில் வாங்கக்கூடிய ஆப்ஷன் வழங்கப்படுகிறது

இந்த பாலிசியை உங்கள் வசதிக்கேற்ப ஆன்லைன் முறையில் வாங்கலாம்.

tax-benefit

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கேரன்டீட் சிங்கிள் பிரீமியம் பிளானை எப்படி வாங்குவது?

படி 1

உங்கள் விவரங்களை உள்ளிடவும்

நீங்கள் யாருக்காக இந்த பிளானை வாங்க விரும்புகிறீர்களோ அந்த நபரின் பெயர், மொபைல் எண் மற்றும் பிற முக்கியமான விவரங்கள் போன்ற அடிப்படை விவரங்களை நிரப்பவும் 

choose-plan

படி 2

முதலீட்டுத் தொகையை உள்ளிடவும்

குறைந்தபட்சம் ₹1 லட்சத்தை ஒருமுறை முதலீடாகக் கொண்டு உடனடியாகத் தொடங்கலாம்.

premium-amount

படி 3

ஆயுள் காப்பீடு ஆப்ஷன்கள் மற்றும் முதிர்வு நன்மை தொகையை தேர்வு செய்யவும்

உங்கள் தேவைக்கேற்ப லைஃப் இன்சூரன்ஸ் தொகை மற்றும் உத்தரவாத முதிர்வு நன்மையைத் தேர்ந்தெடுக்கவும்.

select-stategy

படி 4

உங்கள் மேற்கோளை (quote) மதிப்பாய்வு செய்யவும்

உருவாக்கப்பட்ட மேற்கோளைச் சரிபார்த்து மதிப்பாய்வு செய்யவும். திட்டம் உங்கள் எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட்டையும் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

make-payments

படி 5

பேமென்ட் செலுத்தவும்

செயல்முறையை நிறைவு செய்ய ஏதேனும் ஆன்லைன் பேமென்ட் முறையை தேர்வுசெய்யவும். பின்னர் உங்களின் உத்தரவாத சேமிப்பு பாலிசி பிளான் வழங்கப்படும்.

make-payments

உங்கள் பிளானை காட்சிப்படுத்துங்கள்

alt

வயது 35

வணிகக் கடற்படையின் கேப்டனான ரிஷி, 30 ஆண்டுகள் கால அவகாசத்துக்கான உத்தரவாத சேமிப்பு இன்சூரன்ஸ் பிளானான இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் சிங்கிள் பிரீமியம் பிளானில் ₹20,00,000/- ஒருமுறை கட்டணமாக முதலீடு செய்தார்.

alt

ரிஷியின் குடும்பம்

பாலிசி காலம் முழுவதும் ரிஷி மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் டெத் பெனிஃபிட்டால் பாதுகாக்கப்படுவார்கள். லைஃப் இன்சூரன்ஸ் பெற்றவர் அகால மரணம் அடைந்தால், ரிஷியின் நாமினிக்கு ₹25,00,000/- டெத் பெனிஃபிட் வழங்கப்படும்.

alt

வயது 65

பாலிசி காலத்தின் முடிவில் அவர் ₹1,42,80,000/- மொத்தத் தொகையைப் பெறுகிறார்.

alt

தகுதி வரம்புகள்

நுழைவு வயது

Question
நுழைவு வயது
Answer
  • குறைந்தபட்ச வயது: (90 நாட்கள்) 0 ஆண்டு வயது

டெத் பெனிஃபிட் தொகையாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு வழங்கப்படும்

  • அதிகபட்ச வயது: 45 வயது

 

டெத் பெனிஃபிட்டாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் 10 மடங்கு வழங்கப்படும்

 

  • அதிகபட்ச வயது: 70 வயது

 

டெத் பெனிஃபிட்டாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் 1.25 மடங்கு வழங்கப்படும்

Tags

முதிர்வு வயது

Question
முதிர்வு வயது
Answer
  • குறைந்தபட்ச வயது: 18 வயது


டெத் பெனிஃபிட் தொகையாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு வழங்கப்படும்
 

  • அதிகபட்ச வயது: 60 வயது

 

டெத் பெனிஃபிட்டாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் 10 மடங்கு வழங்கப்படும்

 

  • அதிகபட்ச வயது: 85 வயது 

 

டெத் பெனிஃபிட்டாக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் தொகையின் 1.25 மடங்கு வழங்கப்படும்

Tags

பிரீமியம் செலுத்தும் காலம்

Question
பிரீமியம் செலுத்தும் காலம்
Answer
  • பிரீமியம் பேமென்ட் காலம்: சிங்கிள் பே 
  • சிங்கிள் பிரீமியம் (GST தவிர்த்து) 
    • குறைந்தபட்சம் : ₹1,00,000
    • அதிகபட்சம்: வரம்பு இல்லை, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி பாலிசிக்கு உட்பட்டது
Tags

பாலிசி காலம்

Question
பாலிசி காலம்
Answer
  •  பாலிசி காலம்: 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 30 ஆண்டுகள்.
Tags

முதிர்வின் போது காப்பீட்டுத் தொகை

Question
முதிர்வின் போது காப்பீட்டுத் தொகை
Answer
  •  குறைந்தபட்சம்: ₹1,12,000
  • அதிகபட்சம்: வரம்பு இல்லை, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதி பாலிசிக்கு உட்பட்டது
Tags

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை

IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.

மோஹித் அகர்வால்

(மும்பை மார்ச் 21, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்

IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி  வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது 

சத்யம் நக்வேக்கர்

 (மும்பை, மார்ச் 22, 2024)

IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்

நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை

IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப்  போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.

பவுலோமி பானர்ஜீ

(கோல்கட்டா  21 மார்ச் 2024)

நாங்கள் எப்படி உதவ முடியும்?

View All FAQ

இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கேரன்டீட் சிங்கிள் பிரீமியம் பிளான் என்றால் என்ன?

Answer

இது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிநபர், ஒருமுறை பிரீமியம் செலுத்தும் சேமிப்பு வகை லைஃப் இன்சூரன்ஸ்​ பிளானாகும். எளிமையாகச் சொல்வதானால், இது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு எளிய சேமிப்பு பிளானாகும்.இந்த பேமென்ட் பிளான், ஒரே முறை பிரீமியம் செலுத்தி, பாலிசி காலம் முழுவதும் லைஃப் இன்சூரன்ஸ்​ பாதுகாப்பை வழங்குகிறது. துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில் உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், பாலிசி காலத்தின் முடிவில் உத்தரவாதமாக மொத்தத் தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த பாலிசியில் உள்ள அடிப்படைத் தகுதி வரம்புகள் என்ன (தயாரிப்பு சுருக்கமாக)?

Answer
தகுதி வரம்புகள்விவரங்கள்
குறைந்தபட்ச நுழைவு வயது90 நாட்கள்டெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு வழங்கப்படும்.
அதிகபட்ச நுழைவு வயது70 வயதுடெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு வழங்கப்படும்.
45 வயதுடெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 10 மடங்கு வழங்கப்படும்.
முதிர்வின் போது குறைந்தபட்ச வயது18 வயதுடெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு வழங்கப்படும்.
முதிர்வின் போது அதிகபட்ச வயது85 வயது டெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 1.25 மடங்கு வழங்கப்படும்.
60 வயது டெத் பெனிஃபிட்காக, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 10 மடங்கு வழங்கப்படும்.
பிரீமியம் பேமென்ட் காலம்சிங்கிள் பே
பாலிசி காலம்5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 30 ஆண்டுகள். 
முதிர்வுத் தொகைக்கான உறுதி செய்யப்பட்ட தொகைகுறைந்தபட்சம்அதிகபட்சம்
ரூ. 1,12,000வாரியம் அங்கீகரித்த எழுத்துறுதி பாலிசிக்கு உட்பட்டவரை, எந்தவிதமான வரம்பும் இல்லை.
சிங்கிள் பிரீமியம் (GST தவிர்த்து)குறைந்தபட்சம்அதிகபட்சம்
ரூ. 1,00,000வாரியம் அங்கீகரித்த எழுத்துறுதி பாலிசிக்கு உட்பட்டவரை, எந்தவிதமான வரம்பும் இல்லை.

குறிப்பு: 

  • மைனர்களுக்கான பாலிசிகளில், பாலிசி வழங்கப்பட்டவுடன் ரிஸ்க் கவர் உடனடியாகத் தொடங்கும். லைஃப் இன்சூரன்ஸ் பெற்றவர் 18வது வயதை அடைந்தவுடன், பாலிசி அவருக்கே சொந்தமாக மாறும்.
  • செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் என்பது, கூடுதல் பிரீமியம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகளை தவிர்த்து, பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் (சிங்கிள் பிரீமியம்) மொத்தத்தொகையாகும்
  • குறிப்பிடப்பட்ட வயதுகள் கடைசி பிறந்த நாளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவை.
  • பிரீமியத்தில் பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படும். இந்த வரியின் விகிதம், தயாரிப்பிற்கான பொருந்தக்கூடிய வரியாக, அரசாங்கம் அவ்வப்போது அறிவிக்கும் விகிதத்தின்படி இருக்கும்.

இந்த பாலிசியில் உள்ள வரிச் சலுகைகள் என்ன?

Answer

நடப்பில் உள்ள வருமான வரி சட்டங்களின்படி, செலுத்தப்படும் பிரீமியம் மற்றும் பெறப்படும் நன்மைகளுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கக்கூடும். இவ்வரிச் சலுகைகள், அரசாங்கத்தின் வரி சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டவை. இந்த இன்சூரன்ஸ்​ பிளானை வாங்குவதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை அணுகவும்.

பாலிசி காலத்தின் முடிவில் (முதிர்வு நன்மை) நீங்கள் என்ன பெறுவீர்கள்?

Answer

பாலிசி காலம் முடிவடையும் போது, நீங்கள் முதிர்வு உறுதி செய்யப்பட்ட தொகை (SAM) பெறுவீர்கள். SAM என்பது, பாலிசி முதிர்ச்சியின்போது வழங்கப்படும் உத்தரவாத தொகையாகும். இது, உத்தரவாத முதிர்வு மல்டிபிள் (GMM) மற்றும் சிங்கிள் பிரீமியம் (கூடுதல் பிரீமியம் தவிர்க்கப்படுகிறது) ஆகியவற்றின் பெருக்கலாகக் கணக்கிடப்படுகிறது.

GMM என்பது, காப்பீடு செய்யப்பட்டவரின் வயது, தேர்ந்தெடுக்கப்பட்ட டெத் பெனிஃபிட் மல்டிபிள் மற்றும் பாலிசி காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்

கீழே உள்ள அட்டவணையின்படி அதிக பிரீமியத்தை செலுத்தும்போது முதிர்வு நன்மை காரணியில் அதிகரிப்பு உள்ளது–

பிரீமியம் பேண்டுகள்/ பாலிசி காலம்510 15202530 
5,00,000 முதல் 9,99,999 வரை1.011.011.011.011.011.01
10,00,000 மற்றும் அதற்கும் மேல்1.021.021.021.021.021.020



மேலே குறிப்பிட்ட காரணிகள் பெருக்கல் தன்மை கொண்டவை மற்றும் இணைப்பு A-இல் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாத முதிர்வு மல்டிபிள் (Guaranteed Maturity Multiple) மீது பொருந்தும்.

நீங்கள் அல்லது நாமினி, 5 ஆண்டுகளுக்கு மாதாந்திர தவணைகளாகவோ அல்லது ஒருமுறை மொத்தத் தொகையாகவோ பணத்தை பெற ஆப்ஷன் உள்ளது.

தவணை ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால், மொத்தத் தொகை (S) ஐ வருடாந்திர காரணி (a(n)(12)) மூலம் வகுத்து தவணைத் தொகை நிர்ணயிக்கப்படும், இங்கு ‘n’ என்பது 5 ஆண்டு தவணை காலத்தை குறிக்கிறது.

வருடாந்திர காரணி, நடப்பில் உள்ள SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தை (தற்போது ஆண்டுக்கு 2.70%) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு, தவணை காலம் முழுவதும் மாறாமல் இருக்கும்

தவணை பேமென்ட்கள் தொடங்கியதும், வருடாந்திர காரணி மாறாமல் இருக்கும், ஆனால் இது SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருடாந்திர மதிப்பாய்வுக்கு உட்பட்டது.

நீங்கள் இறுதியான பேமென்ட்டை பெறும்போது, உங்கள் டர்ம் பாலிசி முடிவடையும் மற்றும் அதன்பிறகு எந்த நன்மைகளும் வழங்கப்படாது.

இந்த பாலிசி எவ்வாறு செயல்படுகிறது?

Answer

பாலிசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கீழே எளிய மாதிரி விளக்கப்படத்துடன் விளக்கியுள்ளோம்.

40 வயதான திரு குமார், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கேரன்டீட் சிங்கிள் பிரீமியம் பிளானை வாங்கியுள்ளார். 10 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு (வரிகள் தவிர்த்து) ₹10 லட்சம் ஒரே முறை பிரீமியமாக செலுத்த முடிவு செய்துள்ளார்.


பாலிசி காலத்தின் முடிவில், பாலிசி தொடக்கத்தில் தேர்ந்தெடுத்தபடி, அவருக்கு ₹17,62,250 முதிர்வு நன்மை வழங்கப்படும். முதிர்வு நன்மை பொருந்தக்கூடிய வரி சட்டங்களின் கீழ் வரும்.

பாலிசி காலத்தில் அவர் இறந்தாலும், அவரது அன்புக்குரியவர்கள் ₹12.5 லட்சம் டெத் பெனிஃபிட் பெற்று பாதுகாக்கப்படுவார்கள். அவரது நாமினிகள் டெத் பெனிஃபிட்டை ஒரே முறை மொத்தத் தொகையாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்குப் பகுதியளவு வருமானமாகவோ பெற தேர்வு செய்யலாம்.

இந்த பாலிசியில் நான் லோன் பெற முடியுமா?

Answer

ஆம், நீங்கள் இந்த பாலிசியின் கீழ் லோன் வசதியைப் பெறலாம்.


நீங்கள் எந்த நேரத்திலும் பெறக்கூடிய லோன் தொகை சரண்டர் வேல்யூவின் அடிப்படையில் இருக்கும். நீங்கள் வாங்கிய சரண்டர் வேல்யூவின் 80% வரை லோன் பெறலாம். பெறக்கூடிய குறைந்தபட்ச லோன் தொகை ரூ. 25,000 ஆகும்.

2022-23 நிதியாண்டிற்கான லோனுக்கு விதிக்கப்படும் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.50% (சிம்பிள் வட்டி) ஆகும், இது அவ்வப்போது மாறலாம்.

லோன் வட்டியை கணக்கிட பயன்படுத்தப்படும் அடிப்படை என்பது கடந்த நிதியாண்டின் இறுதியில் உள்ள 10 ஆண்டு G-Sec விகிதம் மற்றும் 250 அடிப்படை புள்ளிகளின் முழுமையான மார்ஜின், அதை அருகில் உள்ள 50 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் அல்லது கீழ் ரவுண்டட் ஆக சுற்றி எடுக்கப்படுகிறது.

பெறப்பட்ட வட்டி விகிதம் அடுத்த நிதியாண்டுக்குப் பொருந்தும்.

லோன் வட்டி விகித கணக்கீட்டில் ஏற்படும் எந்த மாற்றமும் IRDAI-யின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டது.

அடிப்படை புள்ளி என்பது 1% இன்  1/100ஆம் பகுதி, அதாவது 0.01% அல்லது வருடத்திற்கு 0.0001 ஆகும்

லோன் பெற்றவுடன், இந்த பாலிசி எங்களுக்கு ஒதுக்கப்படும். நீங்கள் முழு லோன் தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்தியிருந்தால், இந்த பாலிசியை நாங்கள் மீண்டும் உங்களுக்கு ஒதுக்குவோம்.

டெத் பெனிஃபிட்டை நாமினிகள்/ நியமிக்கப்பட்டவர்/ சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு அல்லது ஆயுள் காப்பீட்டாளருக்கு முதிர்வு நன்மையை செலுத்துவதற்கு முன், பணம் செலுத்தப்படாத எந்தவொரு லோன் தொகையையும் வட்டியுடன் மீட்டெடுப்போம்.நிலுவையில் உள்ள லோன் மற்றும் வட்டி, சரண்டர் வேல்யூவின் 90% ஐ மீறினால், நிறுவனம் பாலிசிதாரருக்கு லோனை பகுதியாக அல்லது முழுமையாக திருப்பிச் செலுத்த அறிவிப்பை அனுப்பும். அந்த அறிவிப்பு வந்த பிறகு லோன் திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், எந்த நன்மைகளும் வழங்கப்படுவதற்கு முன், நிலுவையில் உள்ள லோனையும் அதற்கான வட்டியையும் நாங்கள் கட்டாயமாகக் கழித்துவிடுவோம்.நிலுவையில் உள்ள லோன் மற்றும் வட்டியை மீட்டெடுத்த பிறகு மீதமுள்ள நன்மை இருந்தால், அதுவே வழங்கப்படும்.

உங்கள் பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?

Answer

உங்கள் பாலிசியின் முழு நன்மைகளையும் அனுபவிக்க உங்கள் பாலிசியை ‘தொடரச் செய்தல்’ அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், சில சூழ்நிலைகளில் உங்கள் பாலிசியை சரண்டர் செய்ய விரும்பலாம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்.சிங்கிள் பிரீமியம் பேமென்ட் செலுத்திய உடனே, பாலிசி உடனடியாக சரண்டர் வேல்யூவை பெறும்.


சரண்டர் செய்யும்போது, உத்தரவாத சரண்டர் வேல்யூ (GSV) மற்றும் சிறப்பு சரண்டர் வேல்யூ (SSV) இரண்டிலும் அதிகமானது வழங்கப்படும்.பொருந்தக்கூடிய GSV, பாலிசி காலம் மற்றும் சரண்டர் செய்யும் ஆண்டின் அடிப்படையில் மாறுபடும்.SSV என்பது, ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரின் வயதையும் பொருத்து மாறும்.

GSV காரணிகள், பாலிசியை சரண்டர் செய்த ஆண்டு மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்து மாறுபடும் மற்றும் பின்வரும் முறையில் கணக்கிடப்படும்:

சரண்டர் செய்யும் போது பொருந்தக்கூடிய GSV காரணி, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களுடன் (TPP) பெருக்கப்படும்

GSV காரணிகள் இணைப்பு B இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

SSV பின்வருமாறு கணக்கிடப்படும்:

SSV காரணி1* இறப்பு காப்பீட்டுத் தொகை (SAD) + SSV காரணி 2 * முதிர்வு காப்பீட்டுத் தொகை (SAM)

முன்னொரு ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, SSV காரணி அவ்வப்போது எங்களால் தீர்மானிக்கப்படும்.

உங்கள் பாலிசியில் கிடைக்கும் ஃப்ரீ லுக் பிரீயட் என்ன?

Answer

ஃப்ரீ லுக் பிரீயடுக்குள் உங்கள் பாலிசியை நீங்கள் திருப்பித் தரலாம்

பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில், அந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் மதிப்பாய்வு செய்யும் உரிமை உங்களுக்கு உள்ளது. நீங்கள் ஏதேனும் விதிமுறையை ஏற்கவில்லையெனில், பாலிசியை பெற்ற 15 நாட்களுக்குள் உங்கள் எதிர்ப்பு காரணங்களுடன் இன்சூரருக்கு திருப்பி அனுப்பி, பாலிசியை ரத்து செய்யும் ஆப்ஷனும் உங்களிடம் உள்ளது. டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங் அல்லது மின்னணு முறையில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கான ஃப்ரீ லுக் பிரீயட் 30 நாட்கள் ஆகும்.


ப்ரீ லுக் பிரீயடுக்குள் பாலிசியை ரத்து செய்தால் ரீஃபண்டு பெறுவீர்களா?

ஆம். நீங்கள் செலுத்திய பிரீமியத்தின் சமமான தொகையை ரீஃபண்டு செய்வோம். 

லெஸ்: i. ஏதேனும் ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் இருந்தால்.

லெஸ் ii. செலுத்தப்பட்ட எந்தவொரு முத்திரை வரியும்

லெஸ் iii. மருத்துவ பரிசோதனைக்கு ஏற்படும் செலவுகள், ஏதேனும் இருந்தால். ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் என்பது காப்பீடு காலத்திற்கு இணையான விகிதாசார ரிஸ்க் பிரீமியமாகும்.

 

டிஸ்டன்ஸ் மார்க்கெட்டிங் என்பது கீழ்காணும் வழிகளின் மூலம் இன்சூரன்ஸ் தயாரிப்புகளுக்கான ஒவ்வொரு வேண்டுகோளையும் (லீட் ஜெனரேஷன் உட்பட) மற்றும் விற்பனையையும் உள்ளடக்கியது: (i) தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட வாய்ஸ் முறை; (ii) குறுஞ்செய்தி சேவை (SMS); (iii) மின்னஞ்சல், இணையம் மற்றும் இன்டராக்டிவ் டெலிவிஷன் (DTH) உள்ளிட்ட மின்னணு முறை; (iv) நேரடி அஞ்சல் மற்றும் செய்தித்தாள் & பத்திரிகை செய்திகள் போன்ற காகித முறை; மற்றும், (v) நேரில் இல்லாத பிற எந்தத் தொடர்பு வழிகளிலும் வேண்டுகோள் விடுத்தல்.

இந்த பாலிசியில் (டெத் பெனிஃபிட்) லைஃப் இன்சூர் செய்யப்பட்டவர் இறந்தால் என்ன நடக்கும்?

Answer

பாலிசி காலத்தில் லைஃப் இன்சூர் செய்யப்பட்டவர் இறந்தால், கீழ்க்காணும் டெத் பெனிஃபிட் நாமினிகளுக்கு வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட டெத் பெனிஃபிட் வழங்கப்பட்டதும், பாலிசி முடிவடைகிறது.

இவற்றில் அதிகமானது எதுவோ அத்தொகை நாமினிகளுக்கு கிடைக்கும்:

a.  இறப்பின்போது உறுதி செய்யப்பட்ட தொகை

           அல்லது

b.  இறப்புதேதியின்படி சரண்டர் வேல்யூ


மேலே வரையறுக்கப்பட்ட டெத் பெனிஃபிட், பாலிசிதாரர் அல்லது நாமினிக்கு பாலிசி காலத்தில் அல்லது ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரின் இறப்பு ஏற்பட்டால், 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையாகவோ அல்லது மாதாந்திர தவணைகளாகவோ வழங்கப்படும். டெத் பெனிஃபிட்டை தவணைகளாக பெறும் போது, தவணைத் தொகை மொத்தத் தொகையை (எ.கா., S) வருடாந்திர காரணியால் (அதாவது a(n)(12)) வகுத்து கணக்கிடப்படுகிறது; அதாவது S/a(n)(12), இங்கு ‘n’ என்பது 5 ஆண்டு தவணை காலம் ஆகும். வருட நிதியாண்டின் தொடக்கத்தில் உள்ள SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் வருடாந்திர காரணியைக் கணக்கிட பயன்படுத்தப்படும். நிதியாண்டு 22-23க்கான தற்போதைய SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.70% ஆகும். வருடாந்திர காரணியை கணக்கிட பயன்படும் வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் மதிப்பாய்வுக்குள்ளாகி, SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதனை மாற்றப்படும்.


மேலே வரையறுக்கப்பட்ட வருடாந்திர காரணி, நடைமுறையில் உள்ள SBI சேமிப்பு வங்கி வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். தவணைத் தொகை பேமென்ட் செலுத்துதல் தொடங்கியதும், அந்தக் காரணி தவணை காலம் முழுவதும் நிலையானதாக இருக்கும். டெத் பெனிஃபிட் பேமென்ட் ஆக வழங்கப்பட்டவுடன், பாலிசி முடிவடையும் மற்றும் மேலும் எந்த நன்மைகளும் வழங்கப்பட மாட்டாது

ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் தற்கொலை செய்தால் என்ன நடக்கும்? (தற்கொலை விலக்கு)

Answer

பாலிசியின் கீழ் ஆபத்து தொடங்கிய நாள் அல்லது பாலிசி மீட்பு (ரிவைவல்) செய்யப்பட்ட தேதி முதல் பொருந்தக்கூடிய 12 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் தற்கொலை காரணமாக இறந்தால், பாலிசிதாரரின் நாமினி அல்லது பயனாளி இறப்பு தேதி வரை செலுத்திய மொத்த பிரீமியத்தின் 80% அல்லது இறப்பு தேதியில் கிடைக்கும் சரண்டர் வேல்யூவில் எது அதிகமாக இருந்தாலும் அதனைப் பெற உரிமை உண்டு.

உண்மை இல்லாத அல்லது தவறான தகவல்களைச் சமர்ப்பித்தால் என்ன நடக்கும்?

Answer

மோசடி/தவறான அறிக்கைகள், அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 இன் விதிகளின்படி கையாளப்படும்

அவ்வப்போது திருத்தப்படும் காப்பீட்டுச் சட்டம் 1938 இன் பிரிவு 45 கூறுகிறது:

  1. பாலிசி வெளியிடப்பட்ட தேதி, அல்லது  ரிஸ்க் தொடங்கிய தேதி, அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி, அல்லது பாலிசிக்கு ரைடர் வழங்கப்பட்ட தேதி - எது பிந்தையதோ அந்தத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு, எந்தவொரு ஆயுள் காப்பீட்டு பாலிசியும் எந்த காரணத்தினாலும் கேள்விக்குள்ளாக்கப்படாது.

  2.  மோசடி காரணத்தால், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வெளியிடப்பட்ட தேதி, அல்லது ரிஸ்க் தொடங்கிய தேதி, அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி, அல்லது பாலிசிக்கு ரைடர் வழங்கப்பட்ட தேதி – எது பிந்தையதோ, அதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் கேள்விக்குறியாக்கப்படலாம்: ஆனால், இன்சூரர் அத்தகைய முடிவு எதற்கு அடிப்படையாக உள்ளது என்பதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக காப்பீடு செய்யப்பட்டவருக்கு அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகள், நாமினிகள் அல்லது ஒதுக்கீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  3. துணைப்பிரிவு (2) இல் உள்ள எதுவும் பொருட்படுத்தப்படாமலே, இன்சூரர் ஒரு முக்கியமான உண்மையைத் தவறாகக் கூறியிருப்பது அல்லது மறைத்திருப்பது அவரது அறிவும் நம்பிக்கையும் படி உண்மையானது என்று காப்பீடு செய்யப்பட்டவர் நிரூபித்தால் அல்லது அந்த உண்மையை மறைக்க நோக்கம் இல்லை என்பதை நிரூபித்தால் அல்லது அத்தகைய தவறான அறிக்கை அல்லது மறைவு காப்பீட்டாளருக்கு முன்னதாகத் தெரிந்திருந்தால், எந்தவொரு காப்பீட்டாளரும் மோசடியின் அடிப்படையில் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை மறுக்க முடியாது: ஆனால் மோசடி ஏற்பட்டால், பாலிசிதாரர் உயிருடன் இல்லாத பட்சத்தில், பொய் நிரூபிப்பது பயனாளிகளின் பொறுப்பாகும். 

  4.  லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியானது, பாலிசி வழங்கப்பட்ட தேதி, அல்லது ரிஸ்க் தொடங்கிய தேதி, அல்லது பாலிசி புதுப்பிக்கப்பட்ட தேதி, அல்லது பாலிசிக்கு ரைடர் வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றில் எது பிந்தையதோ அந்தத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுக்குள், காப்பீடு செய்யப்பட்டவரின் ஆயுட்கால எதிர்பார்ப்பிற்கான முக்கியமான உண்மையைக் குறிக்கும் எந்தவொரு அறிக்கையோ அல்லது மறைப்பதோ, பாலிசி வழங்கப்பட்ட அல்லது ரிவைவ் செய்யப்பட்ட அல்லது ரைடர் வழங்கப்பட்ட முன்மொழிவு அல்லது பிற ஆவணங்களில் தவறாகச் செய்யப்பட்டது என்ற அடிப்படையில் கேள்விக்குறியாகலாம்: காப்பீட்டாளர், லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை நிராகரிப்பதற்கான அத்தகைய முடிவின் காரணங்கள் மற்றும் ஆதாரங்களை, எழுத்துப்பூர்வமாக காப்பீடு செய்யப்பட்டவருக்கு அல்லது அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதிகள், நாமினிகள் அல்லது ஒதுக்கீட்டாளர்களுக்கு அறிவிக்க வேண்டும்: மேலும், மோசடியின் அடிப்படையில் அல்லாமல், தவறான அறிக்கை அல்லது முக்கியமான உண்மையை மறைத்ததின் அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்ட தேதி வரை சம்பந்தப்பட்ட பாலிசியில் சேகரிக்கப்பட்ட பிரீமியங்கள், அந்த நிராகரிப்பு தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் காப்பீடு செய்யப்பட்டவர் அல்லது அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதிகள், நாமினிகள் அல்லது ஒதுக்கீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

  5.  இந்தப் பிரிவில் உள்ள எதுவும், காப்பீட்டாளருக்கு வயதுச் சான்றிதழ் கோருவதற்கு உரிமை இருந்தால், எந்த நேரத்திலும் அதனைக் கோருவதை தடுக்கும் விதமாக இருக்காது. மேலும், ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரின் வயது முன்மொழிவில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த ஆதாரங்கள் வெளிப்பட்டால், அதன்படி பாலிசி விதிமுறைகள் மாற்றப்பட்டாலும், எந்த பாலிசியும் கேள்விக்குறியாகக் கருதப்படாது.

உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட எஸ்ப்ளேர் இந்தியா ஆயுள் காப்பீட்டு இருப்பு!

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீ ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீ ஆஃப் லைஃப் ட்ரீம்ஸ் பிளான்

Dropdown Field
கேரண்டீட் ரிடர்ன்ஸ்
Product Description

நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

Product Benefits
  • 3 வருமான விருப்பத்தேர்வுகளின் தேர்வு
  • நீண்ட கால வருமானத்திற்கு உத்தரவாதம்
  • ஆன்லைனில் வாங்குவதன் மூலம் 5% கூடுதல் வருமானம்
  • ஆயுள் காப்பீடு
Porduct Detail Page URL

விலை பெற

Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் புரொடெக்‌ஷன் பிளஸ் பிளான்

Product Image

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் கேரண்டீட் புரொடெக்‌ஷன் பிளஸ் பிளான்

Dropdown Field
டேக்ஸ் சேவிங்
Product Description

பாதுகாப்பு திட்டம் வேண்டுமா? மேலும் பார்க்க வேண்டாம்! இந்தத் திட்டம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எளிதான முறையில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Product Benefits
  • உங்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தேர்வு (ROP)
  • பல வாழ்க்கை விருப்பத்தேர்வுகள்
  • இலகுவான பிரீமியம் விதிமுறைகள்
  • அதே பாலிசியின் கீழ் உங்கள் கணவன்/மனைவிக்கு காப்பீடு செய்யுங்கள்.
  • 99 வயது வரை காப்பீடு கவரேஜ்
Porduct Detail Page URL

விலை பெற

Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான்

Product Image

 

Product Name

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான்

Dropdown Field
இன்வெஸ்ட்மெண்ட்
Product Description

உங்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பது மட்டுமின்றி, செல்வத்தை உருவாக்கவும் உதவும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட் பிளான் மூலம் 1 திட்டத்தில் 2 பலன்களை அனுபவிக்கவும்.

Product Benefits
  • பூஜ்ஜிய நிதி ஒதுக்கீடு கட்டணம்
  • தேர்வு செய்ய 10 வெவ்வேறு நிதிகள்
  • 3 திட்ட விருப்பத்தேர்வுகள்
  • அதிக வருமானத்திற்காக 100% பணம் முதலீடு செய்யப்படுகிறது
  • லைஃப் கவர்
Porduct Detail Page URL

விலை பெற

Product Buy Now URL and CTA Text

மேலும் தெரியும்

IndiaFirst Life லைப் இன்சூரன்ஸ் பிளான்களை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

1.64 கோடி

தொடக்கத்திலிருந்து 16,500+ உயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது

list

கிடைக்கும் 16,500+

BOB & UBI கிளைகளில்

list

30,968 கோடி

டிசம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி AUM

list

1 நாள்

உரிமைகோரல் தீர்வு உத்தரவாதம்

list

மறுப்பு

*Tax benefits may be available on premiums paid and benefits receivable as per prevailing Income Tax Laws. These are subject to change from time to time as per the Government Tax laws. Please consult your tax consultant before buying this policy.

1800 209 8700

வாடிக்கையாளர் சேவை மைய எண்

whatsapp

8828840199

ஆன்லைன் பாலிசி வாங்குதலுக்காக

call

+91 22 6274 9898

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் சாட் செய்யுங்கள்

mail

You’re eligible for a Discount!!

Get 10% off on online purchase of IndiaFirst Life Elite Term Plan