முதிர்வு வயது
- Question
- முதிர்வு வயது
- Answer
-
PT 10 ஆண்டுகள்: 55 வயது
PT 15 ஆண்டுகள்: 65 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
உங்கள் பிளானை காட்சிப்படுத்துங்கள்
PT 10 ஆண்டுகள்: 55 வயது
PT 15 ஆண்டுகள்: 65 வயது
PT 10 ஆண்டுகள்: 45 வயது
PT 15 ஆண்டுகள்: 50 வயது
*PT – பாலிசி காலம்
18 வயது
10/ 15 ஆண்டுகள்
₹1000
5 ஆண்டுகள்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
செலுத்தப்பட்ட மதிப்பை பாலிசி பெற்றிருந்தால், உங்கள் பாலிசிக்கு லைஃப் கவர் தொடர் நன்மை கிடைக்கும்.
இந்த நன்மையின் கீழ், உங்கள் பாலிசி செலுத்தப்பட்ட மதிப்பை பெற்ற பிறகு, ஒரு பாலிசி ஆண்டிற்கான பிரீமியம் செலுத்தப்படவில்லை என்றால், “முதல் செலுத்தப்படாத பிரீமியம்” தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு, செயலில் உள்ள பாலிசியின்படி, இந்த பாலிசியின் கீழ் உள்ள டெத் பெனிஃபிட் நடைமுறையில் உள்ள நிலையில் தொடரும்.இந்த காலக்கட்டத்தில், பிரீமியம் செலுத்தப்படாத ஆண்டிற்காக எளிய ரிவர்ஷனரி போனஸ் வழங்கப்படாது.
“முதல் செலுத்தப்படாத பிரீமியம்” தேதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் பொருந்தும் வட்டியுடன் பிரீமியம் செலுத்தினால், வாடிக்கையாளர் “லைஃப் கவர் தொடர் நன்மை” வழங்கப்படும் காலத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பைப் பெறுவார். அவ்வாறு பிரீமியம் செலுத்தப்பட்டால், திருத்தப்பட்ட "செலுத்தப்படாத பிரீமியம்" தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்காலத்திற்கு லைஃப் கவர் தொடர் நன்மை (Life Cover Continuance Benefit) வழங்கப்படும்.
நீங்கள் செலுத்திய ஆண்டிற்கான பிரீமியம் தொடர்பாக ஏதேனும் ரிவர்ஷனரி போனஸ் இருந்தால், அதையும் பெறுவீர்கள். "முதல் செலுத்தப்படாத பிரீமியம்" தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், பாலிசி குறைக்கப்பட்டு செலுத்தப்பட்ட மதிப்பிற்கு மாற்றப்பட்டு, அதற்கேற்ப டெத் பெனிஃபிட் குறைக்கப்படும்.
இது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும், பங்கேற்கும் பிளான் ஆகும், இது 5 ஆண்டுகள் குறுகிய கட்டண உறுதிப்பாட்டை மட்டுமல்லாமல், ஒரே பாலிசியில் சேமிப்பும் பாதுகாப்பும் வழங்குகிறது. இது மட்டும் அல்ல, நீங்கள் ஒரு பிரீமியத்தை செலுத்த தவறினாலும் கூட எங்கள் பாலிசி உங்கள் ஆயுள் காப்பீட்டு நன்மை தொடர உறுதியளிக்கிறது, இதனால் பிரீமியம் கட்டணத்தை செலுத்த தவறினாலும் கூட உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீட்டை வழங்கி பாதுகாக்கிறது. இந்த பாலிசி வழங்கும் லோன் வசதியின் மூலம் இது உங்கள் பணப்புழக்க தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது. இந்தப் பாலிசியை உங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனிலும் வாங்க முடியும்.
செலுத்தப்படும் பிரீமியங்களுக்கும் பெறக்கூடிய நன்மைகளுக்கும் நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டங்களின் படி வரி நன்மைகள் கிடைக்கலாம். இவை அரசாங்க வரி சட்டங்களின் படி காலந்தோறும் மாற்றப்படலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வரி ஆலோசகரை அணுகுமாறு அறிவிக்கப்படுகிறது.
பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து, பிரீமியம் செலுத்துவதற்காக வழங்கப்படும் கிரேஸ் பிரீயட் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தக் காலத்தில், பாலிசி ஆபத்து கவர் உடன் செயலில் இருப்பதாகக் கருதப்படும். இந்த பாலிசிக்கு, பிரீமியம் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து, வருடாந்திர, அரையாண்டு மற்றும் காலாண்டு தவணைகளுக்கு 30 நாட்களும், மாதாந்திர தவணைகளுக்கு 15 நாட்களும் கிரேஸ் பிரீயட் வழங்கப்படுகிறது. இந்தக் கால அவகாசத்துக்குள் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்தால், இறந்த தினத்திற்கு முன் செலுத்தப்பட வேண்டிய பிரீமியங்களை கழித்த பிறகு, இறப்புத் தொகைநாமினி/நியமிக்கப்பட்டவர்/சட்ட வாரிசுக்கு டெத் பெனிஃபிட் வழங்கப்படும்.
ஆம், இந்த பிளானின் கீழ் உங்களுக்கு லோன் வசதி உள்ளது.
எந்த நேரத்திலும் நீங்கள் பெறக்கூடிய லோன் தொகையானது சரண்டர் வேல்யூவை பொறுத்தது. சரண்டர் வேல்யூவில் 90% வரை லோன் பெறலாம். குறைந்தபட்ச லோன் தொகை ரூ. 1000 ஆக இருக்க வேண்டும். வருடத்திற்கு 9% வட்டி விதிக்கப்படும், இது IRDAI ஒப்புதலுக்கு உட்பட்டு அவ்வபோது எங்களால் திருத்தப்படலாம். திரட்டப்பட்ட வட்டியுடன் கூடிய லோன், சரண்டர் வேல்யூவை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாலிசி முன்கூட்டியே முடிக்கப்படும். பின்னர், நிலுவையில் உள்ள லோனும், அதனுடன் தொடர்புடைய திரட்டப்பட்ட வட்டியும், சரண்டர் தொகையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
இறப்பு/முதிர்ச்சி நிகழ்வுகளுக்கு முன் லோன் திருப்பிச் செலுத்தப்படாதிருந்தால், நிலுவையில் உள்ள லோனும், ஏதேனும் வட்டியுடன், இறப்பு அல்லது முதிர்வு தொகையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
பாலிசியின் முதிர்வுத் தொகை, பாலிசி தொடக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்ததையே அடிப்படையாகக் கொண்டதாகும், மேலும் இது முதிர்ச்சியின்போது வழங்கப்படும் குறைந்தபட்ச நன்மையாகும். முதிர்ச்சியின்போது, நீங்கள் முதிர்வுத் தொகையுடன் சேர்த்து, திரட்டப்பட்ட ரிவர்ஷனரி போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் ஏதேனும் இருந்தால் பெறுவீர்கள்.
குறைந்தபட்ச அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகை | அதிகபட்ச அடிப்படை உறுதி செய்யப்பட்ட தொகை |
---|---|
ரூ. 10,000 | வாரியம் அங்கீகரித்த கொள்கையின்படி ரூ. 2,00,000 |
மேம்படுத்தப்பட்ட நன்மைக்காக, நீங்கள் பிரீமியம் விடுவிப்பு ரைடரை தேர்வு செய்யலாம். குறித்த ரைடர் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வேவர் ஆஃப் பிரீமியம் ரைடர் பிரவுச்சரை பார்க்கவும்.
ஆம், இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் வேவர் ஆஃப் பிரீமியம் (WOP) ரைடரை (UIN:143B017V01) தேர்வுசெய்ய உங்களுக்கு ஒரு ஆப்ஷன் உள்ளது. இந்த ரைடரை தேர்ந்தெடுத்தால், பாலிசிதாரர் / காப்பீடு செய்யப்பட்டவர் மரணம், விபத்தால் நிரந்தர முழுமையான இயலாமை, அல்லது ரைடரில் குறிப்பிடப்பட்டுள்ள கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் பட்சத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரைடர் ஆப்ஷனின் அடிப்படையில், அடிப்படை பாலிசியின் எதிர்கால பிரீமியங்களை தள்ளுபடி செய்வதன் மூலம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
பாலிசிதாரர்/ காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கான ஆப்ஷன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆப்ஷன் | நன்மை |
---|---|
இறப்பின் போது பிரீமியம் விடுவிப்பு | இந்த ஆப்ஷன், ரைடரும் அடிப்படை பாலிசியும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், பாலிசிதாரரின் இறப்பின்போது (ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவர் மற்றும் பாலிசிதாரர் அடிப்படை பாலிசியில் வேறுபட்ட நபர்களாக இருந்தால் மட்டுமே) அடிப்படை பாலிசிக்கான எதிர்காலத்தில் நிலுவையில் உள்ள மற்றும் செலுத்த வேண்டிய அனைத்து பிரீமியங்களையும் விடுவிக்கும் நன்மையை வழங்குகிறது. |
விபத்து காரணமாக முழுமையான நிரந்தர இயலாமை அல்லது (கண்டறியப்பட்ட) கடுமையான நோய்க்கான பிரீமியம் விடுவிப்பு | இந்த ஆப்ஷன், கீழ்க்காணும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும்போது, ரைடரும் அடிப்படை பாலிசியும் நடைமுறையில் இருந்தால், அடிப்படை பாலிசியின் கீழ் நிலுவையில் உள்ள மற்றும் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் விடுவிக்கும் நன்மையை வழங்குகிறது: ரைடரில் காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்தால் முழுமையான நிரந்தர இயலாமையை சந்தித்தல் ரைடரில் உள்ள பட்டியலிலுள்ள கடுமையான நோய்களில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படுதல். |
விபத்து காரணமாக முழுமையான நிரந்தர இயலாமை அல்லது கடுமையான நோய்க்கான பிரீமியம் விடுவிப்பு | இந்த ஆப்ஷன், கீழ்க்காணும் நிகழ்வுகளில் எதுவும் முதலில் நடைபெறுமானால், ரைடரும் அடிப்படை பாலிசியும் நடைமுறையில் இருந்தால், அடிப்படை பாலிசியின் கீழ் நிலுவையில் உள்ள மற்றும் செலுத்த வேண்டிய அனைத்து எதிர்கால பிரீமியங்களையும் விடுவிக்கும் நன்மையை வழங்குகிறது: ரைடரில் காப்பீடு செய்யப்பட்ட நபரின் மரணம் அல்லது விபத்தால் நிரந்தர முழுமையான இயலாமை அல்லது ரைடரில் வரையறுக்கப்பட்ட கடுமையான நோய்களில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்படுதல். இந்த ஆப்ஷனை தேர்வுசெய்ய, காப்பீடு செய்யப்பட்ட நபரும் பாலிசிதாரரும் அடிப்படை பாலிசியின் கீழ் வெவ்வேறு நபர்களாக இருக்க வேண்டும். |
பாலிசி காலத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் எதிர்பாராத விதமாக இறந்தால், நாமினிக்கு மொத்தமாகவோ அடுத்த 5 ஆண்டுகள் வரை மாதாந்திர வருமானமாகவோ டெத் பெனிஃபிட் வழங்கப்படும்.
நிகழ்வுகள் | நன்மைகள் எப்படி எப்போது செலுத்தப்படும் | அத்தகைய நன்மைகளின் அளவு |
---|---|---|
மரணம் | பாலிசி நடைமுறையில் இருந்தால், பாலிசி காலப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால் செலுத்தப்படும் | இறப்புக்கான உறுதி செய்யப்பட்ட தொகை + திரட்டப்பட்ட எளிய ரிவர்ஷனரி போனஸ் (ஏதேனும் இருந்தால்) மற்றும் டெர்மினல் போனஸ் (ஏதேனும் இருந்தால்) வழங்கப்படும். இருப்பினும், குறைந்தபட்ச டெத் பெனிஃபிட், இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்திற்கும் குறைந்தது 105% ஆக இருக்க வேண்டும். |
விபத்து மரணம் | பாலிசி நடைமுறையில் இருந்து, ஆக்சிடென்ட்டல் டெத் பெனிஃபிட் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பாலிசி காலத்தில் ஏற்படும் விபத்து மரணத்திற்கு பணம் செலுத்தப்படும் | இறப்புக்கான உறுதி செய்யப்பட்ட தொகை, டெத் பெனிஃபிட்டுக்கு மேலாக கூடுதல் நன்மையாக வழங்கப்படும். |
இறப்புக்கான உறுதி செய்யப்பட்ட தொகை வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு ஆகும்
டெத் பெனிஃபிட் தவணை முறையில் செலுத்தப்பட்டால், மாதாந்திர தவணைத் தொகை, டெத் பெனிஃபிட் ஆண்டுத்தொகை (அன்யூட்டி) காரணியால் பெருக்கி கணக்கிடப்படும். அங்கு, ஆண்டுத்தொகை காரணி, இறந்த தேதியின்படி நடைமுறையில் உள்ள SBI சேமிப்பு தலா வங்கி வட்டி விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
தவணைத் தொகை பணம் செலுத்துதல் தொடங்கியவுடன், அது தவணை காலம் முழுவதும் நிலையாக இருக்கும்.
நடைமுறையில் உள்ள SBI சேமிப்பு தலா வங்கி வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் மதிப்பாய்வுக்கு உட்பட்டது மற்றும் ஆண்டுக்கு மார்ச் 31 ஆம் தேதி தீர்மானிக்கப்படும்.
வரையறைகள்
“விபத்து” என்பது வன்முறை, எதிர்பாராத, தன்னிச்சையான, வெளிப்புற மற்றும் கண்காணிக்கக்கூடிய இயல்புடைய, உடல் காயத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு அல்லது தொடர்ச்சியான நிகழ்வுகளின் தொடர் ஆகும்.
“உடல் காயம்” என்பது நீரில் மூழ்குதல் மற்றும் உள் காயங்களைத் தவிர, மூளையதிர்ச்சி, சிராய்ப்பு, காயம் போன்ற வெளிப்புற அறிகுறிகளால் நிரூபிக்கப்படக்கூடிய காயமாகும்.
“விபத்து மரணம்” என்பது இறப்பைக் குறிக்கும்:
பின்வருவனவற்றை முதிர்வு நன்மையாக பெறுவீர்கள்:
முதிர்வு நன்மை செலுத்தப்பட்டதும், பாலிசி முடிவடையும் மற்றும் அதன் பிறகு எந்தவிதமான நன்மைகளும் வழங்கப்படமாட்டாது. முதிர்வுக்கான உறுதி செய்யப்பட்ட தொகை என்பது, பாலிசி காலத்தின் தொடக்கத்தில் பாலிசிதாரர் தேர்வு செய்த அடிப்படை காப்பீட்டுத் தொகையாகும். விபத்து நிகழ்ந்த தேதி பாலிசி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே அந்தத் தொகை வழங்கப்படும்.
கவர் ஆப்ஷன் | ரிஸ்க் கவரேஜ் | நன்மை விவரங்கள் |
---|---|---|
லைஃப் ஆப்ஷன் | மரணம் | இறப்புக்கான உறுதி செய்யப்பட்ட தொகை (ஆண்டு பிரீமியத்தின் 10 மடங்கு) மேலும், திரட்டப்பட்ட போனஸ்கள் (ஏதேனும் இருந்தால்) மற்றும் டெர்மினல் போனஸ் (ஏதேனும் இருந்தால்) வழங்கப்படும். குறைந்தபட்ச டெத் பெனிஃபிட், இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் குறைந்தபட்சம் 105% ஆகும். |
எக்ஸ்ட்ரா லைஃப் ஆப்ஷன் | மரணம் மற்றும் விபத்து மரணம் | மேலே குறிப்பிடப்பட்டுள்ள டெத் பெனிஃபிட் உடன், விபத்து மரணத்துக்கான கூடுதல் டெத் பெனிஃபிட் ஆக, மரணத்திற்கான உறுதி செய்யப்பட்ட தொகைக்கு சமமான தொகையும் வழங்கப்படும். |
அங்கீகரிக்கப்பட்ட போனஸ் கொள்கையின் படி, உங்கள் பாலிசி எளிய ரிவர்ஷனரி போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் (ஏதேனும் இருந்தால்) பெற தகுதி பெறும்.
நம் கனவுகளுக்கு ஆதரவாக இரண்டாவது வருமான ஆதாரம் இருந்தால் அது அற்புதம் அல்லவா? உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கான ஒரு வழி இங்கே உள்ளது, இங்கு நீங்கள் 1வது மாத இறுதியில் இருந்து வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
உங்கள் முதலீட்டில் 7 மடங்கு லாபம் பெற வழி இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? உங்கள் தேடல் இங்கே முடிகிறது! இந்த ஒற்றை கட்டணத் திட்டத்தின் மூலம், உங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்