பின்வரும் நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் நியமனதாரர்களின் (நாமினிகளின்) விவரங்களைப் புதுப்பிக்கவோ அல்லது மாற்றவோ நீங்கள் விரும்பலாம்:
- நியமனதாரரின் பெயரில் உள்ள எழுத்துக்களில் மாற்றம்
- நியமனதாரருடனான உறவில் மாற்றம் (முன்மொழிவு படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்ட பிழை காரணமாக)
- நியமனதாரரின் பிறந்த தேதியில் மாற்றம் (முன்மொழிவு படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்ட பிழை காரணமாக)
- நியமனதாரரை மாற்றுதல்
அப்படியானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. பின்வருபவைகளை குறிப்பிடும் பாலிசிதாரரால் முறையாக கையொப்பமிடப்பட்ட ஒரு நியமன மாற்றப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்:
- நாமினியின் பெயர்
- முகவரி
பிறந்த தேதி
- பாலிசிதாரர் உடனான உறவு
2. நியமனதாரர் (நாமினி) மைனராக இருந்தால், நியமிக்கப்பட்டவரின் (அப்பாயிண்டீ) விவரங்கள் கட்டாயமாகும். நியமிக்கப்பட்டவரின் (அப்பாயிண்டீ) பெயர், பிறந்த தேதி, முகவரி ஆகியவையும் தேவைப்படும்.
மாற்றங்களுக்கு நீங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?
எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்:
- எங்களுக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியிலிருந்து, customer.first@indiafirstlife.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்.
- முறையாக கையொப்பமிடப்பட்ட நியமன மாற்றப் படிவத்தின் நகலை இணைக்கவும்
எங்களை சந்திக்கவும்:
எங்களுடைய பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கிளைகளில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று, நியமனத்தில் மாற்றம் செய்வதற்காக கோரிக்கை செய்யுங்கள்.
அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்பவும்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பாலிசிதாரரால் முறையாக கையொப்பமிடப்பட்ட காகிதத்திலான நியமன மாற்றப் படிவத்தை எங்களுக்கு அனுப்பவும்:
IndiaFirst Life Insurance Company Ltd
12th and 13th Floor, North [C] wing, Tower 4,
Nesco IT Park, Nesco Center,
Western Express Highway,
Goregaon (East), Mumbai – 400063.