முதிர்வின்போது வயது
- Question
- முதிர்வின்போது வயது
- Answer
-
அதிகபட்சம்
- 76 வயது
மேலும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவது குறித்து நிபுணரிடம் கேளுங்கள்
உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிறந்த இன்சூரன்ஸ் பிளானை தேர்ந்தெடுக்க எங்கள் லைஃப் இன்சூரன்ஸ் நிபுணர் உங்களுக்கு உதவுவார். அழைப்பை திட்டமிட, கீழே உள்ள சில விவரங்களைப் பகிருங்கள்.
ஆண்
பெண்
மற்ற
உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்ததற்கு நன்றி
எங்கள் பிரதிநிதி விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்.
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
குறைந்தபட்சம்
அதிகபட்சம்
வழக்கமான பிரீமியம்
வரையறுக்கப்பட்ட பிரீமியம்
ஒற்றைப் பிரீமியம்
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
தொந்தரவு இல்லாத (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறை
IndiaFirst Life (ஆன்போர்டிங்) சேர்ந்துகொள்ளும் செயல்முறையிலிருந்து விரிவான மருத்துவ பரிசோதனை வரை சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது. நான் வாங்கிய பிளானின் அம்சங்கள் நான் எதிர்பார்ததை போல் இருந்ததால் என் எதிர்காலத்தைப் பற்றி மன அமைதி கிடைத்தது.
மோஹித் அகர்வால்
(மும்பை மார்ச் 21, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
இனிமையான ஆன்லைன் கொள்முதல் அனுபவம்
IndiaFirst Life இன் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கியது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. இன்றியமையாத அம்சங்களை அவர்களின் பாலிசி பிளான்களில் சேர்த்தது மற்றும் கம்பெனி முகவருடனான எனது இருவழி தொடர்பு ஒரு வரத்தை போன்று இருந்தது
சத்யம் நக்வேக்கர்
(மும்பை, மார்ச் 22, 2024)
IndiaFirst Life இடமிருந்து மக்கள் எப்படி பயனடைந்தார்கள்
நிதி பயணத்தில் நம்பிக்கையான துணை
IndiaFirst Life இன் ரேடியன்ஸ் ஸ்மார்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்னை முற்றிலுமாக வெற்றிகொண்டது. என் நிதி பயணத்தில் நம்பிக்கையான துணையை போன்றது. என்னுடைய முதலீடுகளை நான் எண்ணியதைப் போலவே நெகிழ்வான ஃபண்ட் ஸ்விட்ச் ஆப்ஷன்கள் மூலம் செய்ய முடிந்தது. ஒரு வருடத்திலேயே என் முதலீடுகளில் 20% வருவாயை பார்க்க முடிந்தது! ஆன்போர்டிங் குழுவின் ஆதரவு மிக அருமையாக இருந்தது, உண்மையாகவே கவனித்துக் கொள்வதையும் ஆதரவளிப்பதையும் என்னால் உணர முடிந்தது.
பவுலோமி பானர்ஜீ
(கோல்கட்டா 21 மார்ச் 2024)
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் குரூப் மைக்ரோ இன்சூரன்ஸ் பிளான் என்பது ஒரு நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிப்பேட்டிங், குரூப் மைக்ரோ இன்சூரன்ஸ் பிளான் ஆகும். உங்கள் குழு உறுப்பினர்கள்/ பயனாளிகளுக்காக முதன்மைப் பாலிசிதாரராக நீங்கள் இதை வாங்கலாம். எந்த வகையான கடனுக்கும் லைஃப் கவர் மற்றும்/அல்லது ஒரு வருடத்துக்குப் புதுப்பிக்கத்தக்க குரூப் டெர்ம் அசூரன்ஸ் (OYRGTA) திட்டத்தின் மூலம் முதன்மைப் பாலிசிதாரரின் உறுப்பினருக்கு பாதுகாப்புக் காப்பீட்டை இந்த பாலிசி வழங்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 4 வெவ்வேறு காப்பீட்டு விருப்பத்தேர்வுகளில் இருந்து தேர்வுசெய்யலாம்:
குறையும் காப்பீடு அல்லது நிலையான காப்பீட்டின் கீழ் இந்தப் பாலிசியை வாங்கலாம்.
குறையும் காப்பீடு | நிலையான காப்பீடு |
---|---|
இந்த காப்பீட்டு வகையின் கீழ், இன்சூரன்ஸ் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பக் காப்பீட்டு அட்டவணையின்படி, உத்தரவாதத் தொகையானது காலப்போக்கில் குறையும். துவங்கும்போது உள்ள வயது, பாலினம், கடன் காலம், பிரீமியம் காலம், கடன் வட்டி விகிதம் போன்ற காரணிகளைப் பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். | இந்தக் காப்பீட்டு வகையின் கீழ், இன்சூரன்ஸ் சான்றிதழின்படி, காப்பீட்டுக் காலம் முழுவதும் உத்தரவாதத் தொகை நிலையாகவே இருக்கும். நிலையான காப்பீட்டுக்கு, துவங்கும்போது உள்ள வயது, பாலினம், பாலிசி காலம், பிரீமியம் காலம் போன்ற காரணிகளைப் பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். |
குறையும் காப்பீட்டு வகையில் காப்பீட்டுத் தொகை ரூ.1,000க்கு கீழ் வராது. இந்தக் காப்பீட்டின் கீழ் ஒற்றை அல்லது வரையறுக்கப்பட்ட பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வுகளின் கீழ் நீங்கள் இந்தப் பிளானை வாங்கலாம். கிரெடிட் லைஃப் அல்லது கடன் கணக்கு வைத்திருப்பவருக்கு மட்டுமே குறையும் காப்பீட்டு வகை பொருந்தும். | இந்த காப்பீட்டு வகையில், ஒற்றை, வரையறுக்கப்பட்ட அல்லது வழக்கமான பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வுகளின் கீழ் நீங்கள் இந்தப் பிளானை வாங்கலாம். கடன் கணக்கு வைத்திருப்பவர் அல்லது முதன்மைப் பாலிசிதாரரின் மற்ற உறுப்பினர்களுக்கு நிலையான காப்பீடு பொருந்தும் |
குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை | அதிகபட்ச உத்தரவாதத் தொகை |
---|---|
ஒரு உறுப்பினருக்கு 1000 | ஒரு உறுப்பினருக்கு 2,00,000 காப்பீட்டின் தொடக்கத்தில் உத்தரவாதம் அளிக்கப்படும் தொகை, ஆரம்பக் கடன் தொகையின் 120% ஐ விடக் குறைவாகவோ அதற்குச் சமமாகவோ இருக்க வேண்டும். |
பாலிசி காலத்தின்போது எந்த நேரத்திலும் குறைந்தபட்ச இறப்புப் பலன் தொகை குறைந்தது ரூ.1000 ஆக இருக்கும்.
இந்தப் பாலிசியில் ஈடுபடும் நபர்கள் 'முதன்மைப் பாலிசிதாரர்’ மற்றும் 'உறுப்பினர்'.
முதன்மைப் பாலிசிதாரர் யார்?
முதன்மைப் பாலிசிதாரர் என்பது பாலிசி அட்டவணையில் பாலிசியின் உரிமையாளர்/பாலிசிதாரராகப் பெயரிடப்பட்ட நபர் ஆவார். இது பாலிசியை வைத்திருக்கும் நிறுவனம் ஆகும்.
மற்ற நிறுவனங்கள் என்பவை மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களைக் குறிக்கும்.
உறுப்பினர் யார்?
உறுப்பினர் என்பது முதன்மைப் பாலிசிதாரரின் வாடிக்கையாளர்/பணியாளர்/ உறுப்பினரும், இந்த பாலிசியின் கீழ் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரும் ஆவார். உறுப்பினரின் ஆயுளுக்குப் பலன்கள் வழங்கப்படும். உறுப்பினருக்கான வயது வரம்புகள் -
துவங்கும்போது குறைந்தபட்ச வயது | 14 வயது (கடைசி பிறந்த நாள்) |
---|---|
துவங்கும் போது அதிகபட்ச வயது | 75 வயது (கடைசி பிறந்த நாள்) |
முதிர்வின்போது அதிகபட்ச வயது | 76 வயது (கடைசி பிறந்த நாள்) |
காப்பீடு வழங்கப்படும் குழுவின் அளவு என்ன?
குறைந்தபட்ச குழு அளவு | அதிகபட்ச குழு அளவு |
---|---|
5 | வரம்பில்லை |
ஒற்றை, வரையறுக்கப்பட்ட அல்லது வழக்கமான பிரீமியங்களைச் செலுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். வரையறுக்கப்பட்ட மற்றும் வழக்கமான பிரீமியம் முறைகளின் கீழ் நீங்கள் வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர பிரீமியம் செலுத்தலாம்.
குறையும் காப்பீடு | நிலையான காப்பீடு |
---|---|
ஒற்றைப் பிரீமியம், வரையறுக்கப்பட்ட பிரீமியம் (வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம்) | ஒற்றைப் பிரீமியம், வரையறுக்கப்பட்ட / வழக்கமான பிரீமியம் (வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம்) |
பிரீமியம் செலுத்தும் கால இடைவெளிக்கான பின்வரும் காரணிகள், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரப் பாலிசிகளுக்கான வருடாந்திரப் பிரீமியங்களில் பயன்படுத்தப்படும்
பிரீமியம் செலுத்தும் கால இடைவெளி | வருடாந்திரப் பிரீமியத்தில்ப் பயன்படுத்த வேண்டிய காரணி |
---|---|
வருடாந்திரம் | 0.96 |
அரையாண்டு | 0.49 |
காலாண்டு | 0.25 |
மாதாந்திரம் | 1/12 |
.
குறைந்தபட்சப் பிரீமியம் | அதிகபட்சப் பிரீமியம் |
---|---|
உத்தரவாதத் தொகை அல்லது காப்பீட்டுத் தொகையையும், வயது, பாலினம், மார்ட்டலிட்டி லோடிங், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு விருப்பத்தேர்வுகள் போன்ற பிற காரணிகளையும் சார்ந்துள்ளது. | வரையறுக்கப்பட்ட/ வழக்கமான / ஒற்றைப் பிரீமியம்: அதிகபட்ச உத்தரவாதத் தொகையையும், வயது, பாலினம், மார்ட்டலிட்டி லோடிங், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு விருப்பத்தேர்வுகள் போன்ற பிற காரணிகளையும் சார்ந்துள்ளது. |
ஒரு வருடத்துக்குப் புதுப்பிக்கத்தக்க குரூப் டெர்ம் அசூரன்ஸ் | ஒற்றைப் பிரீமியம் | ஒற்றைப் பிரீமியம் | வழக்கமான பிரீமியம் | வரையறுக்கப்பட்ட பிரீமியம் | |
---|---|---|---|---|---|
நிலையானது | குறைவது | நிலையானது | நிலையானது/குறைவது | ||
குறைந்தபட்ச பாலிசி காலம் | 1 மாதம் | 1 மாதம் | 3 மாதங்கள் | 60 மாதங்கள் | 84 மாதங்கள் |
அதிகபட்ச பாலிசி காலம் | 12 மாதங்கள் | 60 மாதங்கள் | 60 மாதங்கள் | 120 மாதங்கள் | 120 மாதங்கள் |
ஒரு உறுப்பினருக்கான அதிகபட்ச பாலிசி காலமானது, ஒரு வருடத்துக்குப் புதுப்பிக்கத்தக்க குரூப் டெர்ம் அசூரன்ஸ் காப்பீட்டிற்கு 1 வருடமும், நீண்ட கால கிரெடிட் இன்சூரன்ஸ் காப்பீட்டு விருப்பத்தேர்வுக்கு 10 ஆண்டுகளும் ஆகும்.
உறுப்பினரின் முதிர்வு வயது, திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச முதிர்வு வயது வரை மட்டுமே இருக்கும் வண்ணம் ஒரு உறுப்பினருக்கான அதிகபட்ச பாலிசி காலம் தேர்ந்தெடுக்கப்படும்.
குறிப்பு: உறுப்பினரின் பாலிசி காலம் மாதங்களில் (ஒரு முழுமையான ஆண்டு அல்ல) குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் ஒற்றைப் பிரீமியம் அல்லது மாதாந்திர முறை மட்டுமே இருக்கும். எடுத்துக்காட்டாக, பாலிசி காலம் 39 மாதங்கள், 67 மாதங்கள், 118 மாதங்கள் என்பவை போன்று இருந்தால்.
பிரீமியம் பேமெண்ட் காலம் | |
---|---|
வழக்கமான பிரீமியம் | பாலிசி காலத்திற்குச் சமமானது |
வரையறுக்கப்பட்ட பிரீமியம் | பாலிசி காலத்தை விட 24 மாதங்கள் குறைவு |
ஒற்றைப் பிரீமியம் | ஒரு முறை பேமெண்ட் |
இந்த பாலிசியின் கீழ், குறிப்பிட்ட ஒரு கடனுக்காக ஒரு இன்சூரன்ஸ் சான்றிதழின் கீழ் அதிகபட்சம் இரண்டு கூட்டுக் கடன்தாரர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர்கள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி போன்ற, காப்பீடு செய்ய விருப்பமுள்ள சக கடன்தாரர்கள் இந்த பாலிசியில் அனுமதிக்கப்படுவார்கள்.
கூட்டுக் கடன்தாரர்களுக்கு பின்வரும் இரண்டு விருப்பத்தேர்வுகள் உண்டு
முதல் கிளைம் அடிப்படை (100% கடன்) | கடன் பங்குச் சதவீதம் | |
---|---|---|
காப்பீட்டு அளவு |
|
|
கடன் வாங்கியவர் யாரேனும் ஒருவர் அல்லது இருவரின் விபத்து காரணமாக ஏற்படும் டோட்டல் பெர்மனென்ட் டிசெபிலிட்டி அல்லது காப்பீடு செய்யப்பட்ட தீவிர நோயை முதலில் கண்டறிதல் |
|
|
இல்லை, இந்தப் பாலிசியில் கடன் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தப் பாலிசியில் பெய்ட்-அப் பலன்கள் எதுவும் இல்லை.
செலுத்தப்படாத முதல் பிரீமியமின் நிலுவைத் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் வட்டி/தாமதக் கட்டணங்கள் இல்லாமல் பாக்கி பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம் உறுப்பினர்/முதன்மைப் பாலிசிதாரர் பாலிசியை மீட்டெடுக்கலாம். இந்தக் காலகட்டத்தில், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கையின்படி பாலிசியை புதுப்பிக்க உறுப்பினர்/முதன்மைப் பாலிசிதாரருக்கு உரிமை உண்டு.
வரையறுக்கப்பட்ட பேமெண்ட் விருப்பத்தேர்வின் கீழ், உறுப்பினர்/முதன்மைப் பாலிசிதாரர் பாலிசியை மீட்டெடுப்புக் காலமான ஐந்து ஆண்டுகளுக்குள் மீட்டெடுக்கவில்லை என்றால், மீட்டெடுப்புக் காலம் முடிந்ததும், உறுப்பினர்/முதன்மைப் பாலிசிதாரருக்கு இறுதித் தொகை செலுத்தப்பட்டு, அந்த உறுப்பினருக்கான பாலிசி/கவரேஜ் முடிவடையும்.
வழக்கமான பிரீமியம் பேமெண்ட் விருப்பத்தேர்வின் கீழ், உறுப்பினர்/முதன்மை பாலிசிதாரர் பாலிசியை மீட்டெடுப்புக் காலமான ஐந்து ஆண்டுகளுக்குள் மீட்டெடுக்கவில்லை என்றால், பாலிசி/கவரேஜ் முடிவடையும். மீட்டெடுப்பு என்பது நிறுவனத்தின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துறுதிக் கொள்கையின்படி இருக்கும்.
குறிப்பிட்ட தேதியில் பிரீமியமைச் செலுத்தத் தவறினால், பிரீமியமைச் செலுத்துவதற்கான கருணை காலத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்தப் பாலிசியில், வழக்கமான/ வரையறுக்கப்பட்ட பிரீமியமிற்கு 30 நாட்கள் கருணை காலமும், மாதாந்திர பிரீமியம் முறைக்கு 15 நாட்கள் கருணை காலமும் உள்ளது. கருணைக்காலத்தில், பாலிசி அல்லது காப்பீடு செயலில் உள்ள பாலிசியின்படி தொடரும்.
கருணைக்காலத்தின்போது இறப்பு அல்லது டிசெபிலிட்டி ஏற்பட்டால், இறப்பு அல்லது டிசெபிலிட்டி ஏற்பட்ட தேதிக்கு முன் செலுத்த வேண்டிய பிரீமியம் ஏதேனும் இருந்தால், அது மட்டுமே இறப்பு அல்லது டிசெபிலிட்டி பலனில் இருந்து கழிக்கப்படும்.
கருணைக்காலத்திற்குள் பாலிசியின் கீழ் செலுத்த வேண்டிய பிரீமியத்தை செலுத்தாத பட்சத்தில், பாலிசி முடிவடைந்து, எந்தப் பலனும் வழங்கப்படாது. காப்பீடு நிறுத்தப்படும், பாலிசி முடிவடைந்ததால் மேலும் பலன்கள் எதுவும் வழங்கப்படாது.
இருப்பினும், முதன்மைப் பாலிசிதாரர் எங்களிடம் வணிகத்தைக் கணக்கிடத் தவறினால் அல்லது முதன்மைப் பாலிசிதாரரால் பிரீமியம் வசூலிக்கப்பட்டு, சில காரணங்களுக்காக அவை கருணைக்காலத்திற்குள் எங்களுக்குச் செலுத்தப்படவில்லை என்றால், குழுப் பாலிசியைப் பொறுத்தவரை, காப்பீடு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கவரேஜ் வழங்குவோம்.
காப்பீடு செய்யப்பட்ட குழு உறுப்பினர் முறையாகக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை நம்ப வைக்கும் விதமாக தான் பிரீமியத்தைச் செலுத்தி அதற்குரிய முறையான ரசீதைப் பெற்றிருப்பதை நிரூபிக்கும் பட்சத்தில், கருணைக்காலத்திற்குப் பிறகும், அவருக்குக் காப்பீடு தொடர்ந்து வழங்கப்படும்.
முதன்மை பாலிசிதாரர்/உறுப்பினராகிய நீங்கள், உங்கள் பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழை ஃப்ரீ லுக் காலத்திற்குள் திருப்பித் தரலாம்; நீங்கள் ஏதேனும் பாலிசி விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கவில்லை என்றால், பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழைப் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அதற்கான காரணங்களைக் கூறி எங்களிடம் பாலிசி ஆவணம்/இன்சூரன்ஸ் சான்றிதழைத் திருப்பித் தரலாம். டிஸ்டன்ஸ் மார்கெட்டிங் அல்லது எலக்ட்ரானிக் பயன்முறையில் வாங்கப்பட்ட பாலிசிகளுக்கான ஃப்ரீ-லுக் காலம் 30 நாட்களாக இருக்கும்.
உங்கள் பாலிசியைத் திருப்பித் தரும்போது உங்களுக்கு ஏதேனும் ரீஃபண்டு வழங்கப்படுமா?
ஆம். இதற்குச் சமமான தொகையை நாங்கள் திருப்பித் தருவோம் - செலுத்தப்பட்ட பிரீமியம்
கழித்தல்:i. பாலிசி செயலில் இருந்த காலத்திற்கான ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம். இதில் ப்ரோ-ரேட்டா ரிஸ்க் பிரீமியம் என்பது காப்பீட்டுக் காலத்திற்கான விகிதாசார ரிஸ்க் பிரீமியமாகும்.
கழித்தல் ii. செலுத்தப்பட்ட எந்த ஸ்டாம்ப் டியூட்டியும்
கழித்தல் iii. மருத்துவப் பரிசோதனையின்போது ஏற்படும் செலவுகள், ஏதேனும் இருந்தால்
உறுப்பினர் மட்டத்தில் உள்ள காப்பீடு, இவற்றுள் எது முதலில் வருகிறதோ அப்போது நிறுத்தப்படும்:
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் டெர்ம் பிளான் ஆனது கார்ப்பரேட் டெர்ம் இன்சூரன்ஸுடன் விரிவான குழு பாதுகாப்பை வழங்குகிறது, நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த குரூப் டெர்ம் பிளான் ஆனது பிரீமியம் செலுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வுகள் மற்றும் வரிப் பலன்கள் ஆகியவற்றில் இலகுத்தன்மையை வழங்குகிறது. பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) பாதுகாப்பு மூலம் உங்கள் குழு ஆயுள் காப்பீட்டைப் பாதுகாக்கவும்.
அறிமுகம் செய்கிறோம், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் குரூப் லிவிங் பெனிஃபிட்ஸ் பிளான், இது நிறுவனங்களுக்கான விரிவான குழு சுகாதார காப்பீட்டு தீர்வாகும். பலதரப்பட்ட சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கார்ப்பரேட் சுகாதாரத் திட்டம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, எலும்பு முறிவுகள், உடல் குறைபாடுகள் மற்றும் ஆபத்தான நோய்களின் போது நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் பணியாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் குழு சுகாதாரத் திட்டத்திற்கு இந்தியா ஃபர்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும்.
ஒரு வருடாந்திர புதுப்பிக்கத்தக்க லைஃப் பாலிசி, இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமானது சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ள எவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எளிய மற்றும் விரைவான செயல்முறையின் மூலம் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.
அறிவு மையம்
அனைத்தையும் பார்க்கவும்