டாக்டர். பூனம் டாண்டன்
தலைமை முதலீட்டு அதிகாரி
டாக்டர். பூனம் டாண்டன் எங்கள் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஆவார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் (ஹானர்ஸ்), ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் மேலாண்மைப் படிப்பில் தத்துவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்ஸின் சான்றளிக்கப்பட்ட அசோசியேட் ஆவார். பிப்ரவரி 25,2010 அன்று அவர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன்பு, அவர் மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தலைமை மேலாளராக (முதலீடுகள்) வேலை செய்துள்ளார். எங்கள் நிறுவனத்தில் அவர் மற்ற பொறுப்புகளுடன் முதலீட்டு செயல்பாட்டை மேற்பார்வையிடும் பொறுப்பையும் மேற்கொண்டுள்ளார்.
விராஜ் எம் நட்கர்னி
நிதி மேலாளர் - பங்குகள்
விராஜ், புனேவில் உள்ள சிம்பயோசிஸில் எம்பிஏ (நிதி) படித்த நிறுவனச் செயலாளர் ஆவார், மேலும் அவர் புனே பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்ர். அவர் நிதித் துறையில், முக்கியமாக பங்குகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர் ஆவார். அவர் பகுப்பாய்வில் அனுபவம் பெற்றவர் மற்றும் பங்குச் சந்தை இயக்கவியலைப் புரிந்துகொண்டவர் ஆவார். இந்த பணிக்கு வரும் முன், அவர் ஏஞ்சல் புரோக்கிங், ஃபார்ச்சூன் ஃபைனான்சியல்ஸில் மூத்த ஆராய்ச்சி பகுப்பாய்வாளராக இருந்தார். அங்கு அவர் நிறுவன முன்னணியில் அடிப்படை ஆராய்ச்சியைக் கையாண்டார் மற்றும் பல துறைகளைக் கண்காணிப்பதில் ஈடுபட்டார். இங்கே, விராஜ் பங்குகளுக்கான ஃபண்ட் மேனேஜராக இருக்கிறார்.
சந்தீப் ஷிர்சாத்
நிதி மேலாளர் - நிலையான வருமானம்
சந்தீப் ஒரு பி.காம் பட்டதாரி மற்றும் தகுதிபெற்ற செலவு கணக்காளர் (ICWAI). மியூச்சுவல் ஃபண்ட், பேங்கிங், PMS மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகளில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். கடந்த காலத்தில், அவர் மல்டி-ஆக்ட் ஈக்விட்டி ரிசர்ச் (PMS), மேட்ரிக்ஸ் AMC, HSBC (நிறுவன நிதிச் சேவைகள்), மற்றும் UTI AMC பிரைவேட் லிமிடெட் (UTI MF) ஆகியவற்றுடன் பணிபுரிந்துள்ளார். நிதி மேலாண்மை - கடன் மற்றும் பேலன்ஸ்ட் ஃபண்ட்கள், கருவூல மேலாண்மை, ஃபண்ட் அக்கவுண்டிங், முதலீட்டு செயல்பாடுகள், மியூச்சுவல் ஃபண்ட் இணக்கம் மற்றும் டொமைன் நிபுணராக முதலீட்டு செயல்பாடுகள் தொடர்பான IT புரோஜெக்ட்களில் அனுபவம் பெற்றவர் ஆவார்.
இன்று, அவர் நிலையான வருமானத்திற்கான நிதி மேலாளராக எங்கள் நிறுவனத்தின் ஒரு அங்கமாக உள்ளார்.