சஷி தார்
இயக்குநர்
திரு. சஷி தார் அவர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் டிரஷரி & குளோபல் மார்க்கெட்ஸ் துறையின் சீஃப் ஜெனரல் மேனேஜராக உள்ளார். அங்கு அவர் டிரஷரி ஆபரேஷன்ஸ், சிறப்பு டிரஷரி செயல்பாடுகள், சர்வதேச பேங்க்கிங், பொறுப்புகள் மேலாண்மை மற்றும் அந்நிய செலாவணிச் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். அவர் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் வாரியத்தில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
பேங்க்கிங் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், அவர் டிரஷரி மேலாண்மை, சர்வதேச பேங்க்கிங் கிரெடிட், ரீடெயில் மற்றும் கார்ப்பரேட் பேங்க்கிங் செயல்பாடுகள் மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை ஆகியவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார். தனது தனித்துவமான பணி வாழ்க்கையில், அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சந்தைகளில் பல தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அவரது முக்கியப் பணிகளில் IFSC பேங்கிங் யூனிட் தலைவர் மற்றும் பிராஞ்ச் ஹெட் – இன்டர்நேஷனல் பேங்க்கிங் பிசினஸ் (IBB) ஆகிய பொறுப்புகள் அடங்கும். அவர் பேங்க் ஆஃப் பரோடா (உகாண்டா) லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு அவர் வணிக வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் செயல்பாடுகளை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
திரு. தார் பேச்சிலர் ஆஃப் காமர்ஸ் பட்டம், LLB பட்டம், CAIIB தகுதி மற்றும் டிப்ளோமா இன் பிசினஸ் ஃபைனான்ஸ் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.