சுந்தர் நடராஜன்
சீஃப் ஹியூமன் ரிசோர்சஸ் ஆஃபீஸர்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் சீஃப் ஹியூமன் ரிசோர்சஸ் ஆஃபீஸராக (CHRO), திறமை மேலாண்மை, செயல்திறன் மேலாண்மை, நிறுவன மேம்பாடு, பயிற்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு சுந்தர் நடராஜன் பொறுப்பாவார். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் இடர், மோசடிக் கட்டுப்பாடு, நிர்வாகம், விற்பனைப் பயிற்சி, செயல்திறன் மேலாண்மை, பார்ட்னர் வங்கிகளின் முக்கியக் கணக்கு மேலாண்மை உள்ளிட்ட பல செயல்பாடுகளை சுந்தர் வழிநடத்தியுள்ளார்.
சுந்தருக்கு காப்பீட்டுத் துறையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு பணி அனுபவம் உள்ளது. நிர்வாகம், விற்பனை, செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் தக்கவைப்பு, உத்தி, வணிகத் திட்டமிடல், பயிற்சி, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அவர் சிறந்து விளங்கியுள்ளார். அவர் இதற்கு முன்பு அவிவா இந்தியா, ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ், ஒகில்வி பப்ளிக் ரிலேஷன்ஸ இந்தியா ஆகியவற்றில் பதவி வகித்துள்ளார். அவர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிஸ்க் மேனேஜ்மென்ட் (IRM) – இந்தியா அஃபிலியேட்டின் ஆலோசனைக் குழுவில் உள்ளார்.
சுந்தர் இந்தியாவின் மோஸ்ட் அஜைல் HR லீடர்களில்(2024) ஒருவர் என்றும் HR ஐகான் ஆஃப் தி இயர் (2025) என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், மும்பை NMIMS பல்கலைக்கழகத்தில் PGDBA பட்டமும் பெற்றுள்ளார். மேலும் IIM அகமதாபாத்தில் ஆக்சிலரேட்டட் லீடர்ஷிப் புரோகிராமும், ISB ஹைதராபாத்தில் ஃப்யூச்சர் CHRO புரோகிராமும் முடித்துள்ளார். அவர் லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிஸ்க் மேனேஜ்மென்ட்டின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.