சுனந்தா ராய்
கன்ட்ரி ஹெட் – பேங்க் ஆஃப் பரோடா சேனல்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் பேங்க் ஆஃப் பரோடா சேனலின் கன்ட்ரி ஹெட்டாக, சுனந்தா ராய் பேங்க் ஆஃப் பரோடா சேனலுக்கான உத்தி மற்றும் விற்பனைக்குத் தலைமை தாங்குகிறார். அவர் இந்தியா முழுவதும் வங்கியின் விரிவான கிளை நெட்வொர்க் மூலம் காப்பீட்டு விநியோகத்தை அதிகப்படுத்தி, பாங்க்கசூரன்ஸ் சேனலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வழிநடத்துகிறார்.
வலுவான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டுத் திறன் கொண்ட மேலாண்மை நிபுணரான சுனந்தா, திட்டமிட்ட செயல்களை எப்போதும் திட்டமிட்டபடியே செய்து முடித்துள்ளார். மோடி டெல்ஸ்ட்ரா (ஏர்டெல்), மேக்ஸ் நியூயார்க் லைஃப், எச்எஸ்பிசி பேங்க், கனரா எச்எஸ்பிசி லைஃப் ஆகியவற்றில் அவர் பணியாற்றிய காலத்தில், ஆரம்பக்கட்டத்திலிருந்தே வருவாய், லாபம் மற்றும் சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைய வைத்துள்ளார். சேனல் குரோத் லீடர் ஆஃப் தி இயர் – இன்சூரன்ஸ், எக்ஸலன்ஸ் இன் பேங்க் சேனல் ஸ்ட்ரேட்டஜி அண்ட் எக்ஸிகியூஷன் உள்ளிட்ட விருதுகள் மூலம் அவரது தலைமைத்துவம் கௌரவிக்கப்பட்டுள்ளது.
சுனந்தா சிங்கப்பூரின் எமரிட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பொது மேலாண்மையில் முதுகலை டிப்ளமாவும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். அவர் ஒரு சார்ட்டர்டு வெல்த் மேனேஜரும் ஆவார், ஹைதராபாத்தின் ஐஎஸ்பி கல்வி நிறுவனத்தில் பொது மேலாண்மை திட்டத்தை முடித்துள்ளார்.
சுருக்கமான நிர்வாகச் சுயவிவரம்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் பேங்க் ஆஃப் பரோடா சேனலின் கன்ட்ரி ஹெட்டான சுனந்தா ராய் பாங்க்கசூரன்ஸ் சேனலுக்கான உத்தி மற்றும் விற்பனையை வழிநடத்துகிறார். அவர் வங்கியின் விரிவான கிளை நெட்வொர்க் மூலம் காப்பீட்டு விநியோகத்தை அதிகப்படுத்தி, மேம்படுத்துகிறார். அனுபவம் வாய்ந்த மேலாண்மை நிபுணரான அவர் தனது வலுவான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவம் மூலம், ஏர்டெல், மேக்ஸ் நியூயார்க் லைஃப், எச்எஸ்பிசி பேங்க், கனரா எச்எஸ்பிசி லைஃப் ஆகியவற்றில் ஆரம்பக்கட்டத்திலிருந்தே வருவாய், லாபம் மற்றும் சந்தைப் பங்கில் நிலையான வளர்ச்சிக்குப் பணியாற்றி வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி சாதனை படைத்துள்ளார்.
சேனல் குரோத் லீடர் ஆஃப் தி இயர் – இன்சூரன்ஸ், எக்ஸலன்ஸ் இன் பேங்க் சேனல் ஸ்ட்ரேட்டஜி அண்ட் எக்ஸிகியூஷன் உள்ளிட்ட விருதுகள் மூலம் அவரது தலைமைத்துவம் கௌரவிக்கப்பட்டுள்ளது.