நளின் பண்டாரி இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் ஃபைனான்ஸ் கண்ட்ரோலராக உள்ளார். அவர் ஒரு சார்ட்டர்டு அக்கவுண்ட்டன்ட்டும் ஆவார். இவர் காப்பீடு, மின்சாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் நிதித் தலைமைப் பொறுப்பில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உடையவர் ஆவார். நிறுவனத்தின் நிதி, வரிவிதிப்பு, நிதித் திரட்டல், IFRS அமலாக்கம், உள் கட்டுப்பாடுகள், தணிக்கைகள், சட்டப்பூர்வ இணக்கம் மற்றும் நிதி மாற்ற முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவதற்கு இவர் பொறுப்பாவார்.
தனது பணி அனுபவத்தில், நிதி உத்தி, IPO தயார்நிலை மற்றும் செயலாக்கம், மெர்ஜர்கள் மற்றும் அக்விசிஷன்கள், மூலதனம் மற்றும் கடன் நிதித் திரட்டல், செயல்பாட்டு மூலதன மேலாண்மை, கட்டண மேம்பாடு, நிதிச் செயல்பாடுகள், கண்ட்ரோலர்ஷிப், உரிய நடவடிக்கைகள், செயல்முறை மாற்றம், கார்ப்பரேட் நிர்வாகம் ஆகியவற்றில் நளின் விரிவான நிபுணத்துவம் பெற்றுள்ளார். நிதி மாற்றம், செயல்முறை ஆட்டோமேஷன், உள் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், IFRS அமலாக்கம் மற்றும் வணிகத் தலைவர்கள், கட்டுப்பாட்டாளர்கள், பேங்க்கிங் பார்ட்னர்கள், வெளித் தணிக்கையாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் வணிகக் கூட்டாண்மை உள்ளிட்ட திட்டமிடல் முயற்சிகளை இவர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, ஐடிபிஐ ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் (தற்போது ஏஜியஸ் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ்), கோடக் லைஃப் இன்சூரன்ஸ், எனெர்கான் இந்தியா, பஜாஜ் இந்துஸ்தான் ஆகிய நிறுவனங்களில் நளின் பணியாற்றியுள்ளார், இதன் மூலம் பிரபல நிறுவனங்களில் அதிவேக வளர்ச்சியும் சிறந்த அனுபவமும் பெற்றுள்ளார்.
அவரது திட்டமிடல் மனநிலை மற்றும் கூட்டுத் தலைமைத்துவ பாணிக்காகப் பெயர்பெற்ற நளின், அதிகச் செயல்திறன் கொண்ட நிதிக் குழுக்களை உருவாக்குவதிலும், சுறுசுறுப்பான, திறமையான, எதிர்காலத்திற்கேற்ற நிதிச் செயல்பாடுகளை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
நளின் ஜோத்பூரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்டான அவர் ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ISB) ISB CFO திட்டத்தை முடித்துள்ளார்.