அத்ரி சக்ரபோர்த்தி
சீஃப் ஆப்பரேட்டிங் ஆஃபீஸர்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் சீஃப் ஆப்பரேட்டிங் ஆஃபீஸராக, அத்ரி சக்ரபோர்த்தி வணிகச் செயல்பாடுகள், தொழில்நுட்பம், தரவு ஆகியவற்றில் தனது ஆழ்ந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, செயல்பாட்டுத் திறன் மற்றும் திட்டமிட்ட வளர்ச்சியை மேபடுத்துகிறார். விநியோகம் மற்றும் கிளைச் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை, புதிய வணிகம் மற்றும் காப்பீட்டு எழுத்துறுதி, நிலைத்தன்மை, கிளைம்கள், தொழில்நுட்பம், தரவு அறிவியல், மாற்ற மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அவர் கண்காணிப்பதோடு, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
காப்பீட்டுத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உட்பட, மொத்தத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை அனுபவமுடைய அத்ரி சேவை விநியோகத்தை மாற்றுவதிலும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளை வழிநடத்துவதிலும் மாபெரும் சாதனை படைத்துள்ளார். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் சுமார் இருபது ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு அவர் இவிபி மற்றும் சீஃப் ஆஃப் ஆப்பரேஷன்ஸ் & ஃபெசிலிட்டிஸ் ஆகப் பணியாற்றினார். சிட்டிபேங்க் இந்தியா, குஜராத் லீஸ் ஃபினான்ஸிங், யுனைடெட் கிரெடிட் ஃபினான்ஸியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களிலும் அவர் தலைமைப் பொறுப்புகள் வகித்துள்ளார்.
அத்ரி, பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்ஸ், பிலானியில் மேலாண்மை ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.