சமீர் குப்தா
கன்ட்ரி ஹெட் – பங்கா GCL & பெர்ஃபார்மன்ஸ் மேனேஜ்மென்ட்
சமீர் குப்தா, பங்கா GCL & பெர்ஃபார்மன்ஸ் மேனேஜ்மென்ட்டின் கன்ட்ரி ஹெட் ஆவார். அவர் பங்கா GCL சேனலுக்கான விற்பனையை மேபடுத்துகிறார், பான்ங்க்கஷூரன்ஸ் வணிகத்திற்கான விநியோகத் திட்டமிடல் மற்றும் செயல்திறன் மேலாண்மையை மேற்பார்வையிடுகிறார், மதிப்பை உருவாக்குவதற்காக தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனர்களில் ஒருவரான இவர், விற்பனை, வணிக மேம்பாடு, முக்கியக் கணக்கு மேலாண்மை, விநியோக உத்தி ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகள் வகித்து நிறுவன வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளார். மேலும் லாபகரமான பார்ட்னர்ஷிப்களைப் பெறுவதிலும் செயல்படுத்துவதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இவர் காப்பீட்டுத் துறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் எச்டிஎஃப்சி லைஃப், கனரா எச்எஸ்பிசி லைஃப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். அங்கு அவர் ஏஜென்சி மற்றும் பாங்க்கஷூரன்ஸ் சேனல்களில் விற்பனையில் சிறந்த அனுபவம் பெற்றார்.
மோடி நகரில் உள்ள சென்டர் ஃபார் மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட்டில் சமீர் PGDBA பட்டம் பெற்றுள்ளார்.