திரு. ராஜாராமன் அருணாச்சலம்
স্বাধীন পরিচালক
திரு. ராஜாராமன் அருணாச்சலம் அவர்கள் தொழில்துறையிலும் ஒழுங்குமுறை நிபுணத்துவத்திலும் மேலும் பல்வேறு வகையான பணிகளிலும் தான் பெற்ற 30 வருடகால அனுபவத்தை IndiaFirst Life நிறுவனத்திற்கு ஒரு இண்டிபெண்டெண்ட் டைரக்டராக வழங்கவுள்ளார். அவரது இந்த சீரிய பணி அனுபவத்தில் கார்பரேட், கன்சல்டிங், ரெகுலேட்டரி டொமைன், ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, ஓய்வூதியங்கள், பணியாளர் நலன் போன்ற பல்வேறு துறைகளிலும் பல முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவேரிஸ், இந்தியன் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட், மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளார்.
திரு. அருணாச்சலம் அவர்கள் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவேரிஸ் போன்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் ஆலோசனை வாரியங்களில் பணியாற்றி, காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். மிக சமீபத்தில், அவர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆக்சுவேரிஸ் அமைப்பின் தலைவராகவும் மற்றும் CEO பதவியிலும் பணியாற்றியுள்ளார்.
IndiaFirst Life நிறுவனத்தின் இண்டிபெண்டெண்ட் டைரக்டராக தனது பரந்த அறிவையும், திட்டங்களுக்கான உத்திகளையும் மற்றும் நிர்வாக நிபுணத்துவத்தையும் கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் மற்றும் காப்பீட்டுத் துறையில் புதுமைகளை புகுத்தவும் பணியாற்றுவார்.