சுமீத் சாஹ்னி
சீஃப் டிஸ்ட்ரிபியூஷன் ஆஃபீஸர் – ஏஜென்சி & அலையன்சஸ்
சுமீத் சாஹ்னி இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் ஏஜென்சி & அலையன்சஸின் சீஃப் டிஸ்ட்ரிபியூஷன் ஆஃபீஸராக உள்ளார். வளர்ச்சியையும் வலுவான கூட்டுறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற அவரது ஆர்வத்திற்கு ஏற்ற பொறுப்பாக இது அமைந்தது. சுமீத்தின் தனிச்சிறப்பும் கருணை உணர்வும் காப்பீட்டுத் துறைக்கும் அவர் சேவை செய்யும் சமூகத்திற்கும் ஒரு வரமாகத் திகழ்கிறது.
காப்பீட்டுத் துறையில் 27 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ள சுமீத் தனது திட்டமிடல் தலைமைத்துவத்திற்கும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனது ஆர்வத்திற்கும் புகழ்பெற்றவர். விற்பனை, விநியோகம், திட்டமிடல் மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். இவை அனைத்தும் நிலையான மற்றும் மதிப்புமிக்க வணிக மாதிரிகளை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
சுமீத் இதற்கு முன்பு ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏஜென்சி வணிகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவற்றிலும் முக்கியப் பதவிகளை வகித்தார்.
டிஸ்டிங்குவிஷ்டு லீடர்ஷிப் இன் ஏஜென்சி சேனல் டெவலப்மெண்ட் (2025) மற்றும் எக்ஸலன்ஸ் இன் ஏஜென்சி டிஸ்ட்ரிபியூஷன் (2026) உள்ளிட்டவற்றின் மூலம் அவரது தலைமைத்துவம் கௌரவிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையின் கீழ், ஏஜென்சி & அலையன்சஸ் சேனல் எக்ஸலன்ஸ் இன் ஏஜென்சி எக்ஸ்பான்ஷன் ஸ்ட்ரேட்டஜி விருதையும் (2025) பெற்றது.
சுமீத் புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட வெல்த் பிளானர், கார்னெல் பல்கலைக்கழகத்தில் எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் முடித்துள்ளார்.