அமே பாட்டீல்
கன்ட்ரி ஹெட் – கார்ப்பரேட் பிசினஸ் & ஸ்ட்ரேட்டஜிக் அலையன்சஸ்
அமே பாட்டீல் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் கார்ப்பரேட் பிசினஸ் & ஸ்ட்ரேட்டஜிக் அலையன்சஸின் கன்ட்ரி ஹெட்டாக உள்ளார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனர்களில் ஒருவரான அமே, பல விற்பனைச் சேனல்களை வழிநடத்தி நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். தனது தலைமைப் பொறுப்புகளில், அவர் குரூப் கிரெடிட் லைஃப் சேனலை அமைப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும் அவர வெஸ்ட் ஜோன் பாங்க்கசூரன்ஸ் நேஷனல் ஹெட்டாகவும் பணியாற்றியுள்ளார்.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள அமே, இதற்கு முன்பு ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் கோவா பல்கலைக்கழகத்தில் நிதிச் சேவைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளாதோடு, LLB மற்றும் B.Com பட்டங்களையும் பெற்றுள்ளார்.