டாக்டர் பூனம் டான்டன்
சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃபீஸர்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃபீஸராக, நிதி மேலாண்மை , முதலீட்டு உத்தி உள்ளிட்ட நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைகளை டாக்டர் பூனம் டான்டன் மேற்பார்வையிடுகிறார். பூனம் BFSI துறையில் நிதிச் சந்தைகள் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த ஆழ்ந்த நுண்ணறிவு கொண்ட ஒரு திறமையான நிபுணர் ஆவார்.
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்துடனான தனது 16 ஆண்டுகால அனுபவத்தில், கார்ப்பரேட் குரூப் பிசினஸ், ஃபிக்சட் இன்கம் ULIP மற்றும் பிற பாரம்பரிய ஃபண்டுகள் என பல போர்ட்ஃபோலியோக்களை பூனம் நிர்வகித்துள்ளார். அவர் பாரம்பரிய போர்ட்ஃபோலியோவில் ஈக்விட்டி முதலீட்டிற்கான அசெட் அலோகேஷனையும் நிர்வகித்தார், அசெட் லையபிலிட்டி கமிட்டியிலும் (ALCO) பங்களித்தார்.
31 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுடைய அவர் மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ், பேட்டர்னோஸ்டர் எல்எல்சி, செக்யூரிட்டீஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஸ்டஸி) இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா (IDBI) போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2001-ல் கார்ப்பரேட் பாண்ட்ஸ் டெஸ்க்கையும், 2004-ல் STCI நிறுவனத்தில் ஸ்வாப்ஸ் டெஸ்க்கையும் நிறுவிய குழுவில் ஒருவராக இருந்தது பூனமின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் அடங்கும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள CSC இ-கவர்னன்ஸ் வாரியத்தில் பூனம் பணியாற்றுகிறார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் பி.காம் (ஹானர்ஸ்) பட்டமும், ஜாம்ஷெட்பூரின் XLRI கல்வி நிறுவனத்தில் PGDBM பட்டமும், மும்பையின் NMIMS பல்கலைக் கழகத்தில் நிதி மேலாண்மையில் முனைவர் பட்டமும் (PhD) பெற்றுள்ளார்.