வருண் குப்தா
தலைமை விநியோக அதிகாரி – பாங்க்கசூரன்ஸ்
இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தில் பாங்க்கசூரன்ஸ் தலைமை விநியோக அதிகாரி என்ற முறையில், தற்போதுள்ள பாங்க்கசூரன்ஸ் பார்ட்னர்ஷிப்களின் வலுவான நெட்வொர்க்கை வழிநடத்துவதற்கும், நிறுவனத்தின் ப்ரொப்ரைட்ரி விற்பனைக் குழுவை உருவாக்குவதற்கும், நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த புதிய கூட்டுப்பணிகளை ஏற்படுத்துவதற்கும் வருண் குப்தா பொறுப்பாவார்.
வருண் மக்களைச் சார்ந்தும் வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்டும் வணிகங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். அவர் சரியான கலாச்சாரத்தை உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர். இது உயர் செயல்திறன் குழுக்களை ஊக்குவிப்பதற்கான உந்துசக்தியாகச் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அவரது அணுகுமுறை நிலையான வளர்ச்சிக்கும், சிக்கலான சவால்களைத் தீர்க்கவும் உதவியுள்ளது. விற்பனைத் தலைமைத்துவத்தில் 28 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், வருண் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், திட்டமிடல் மூலம் நேர்த்தியாக பெரிய அளவிலான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ள்ளார்.
இதற்கு முன்பு, மேக்ஸ் லைஃப் நிறுவனத்தில் பணிபுரிந்த வருண் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஏஜென்சி மற்றும் பாங்க்கசூரன்ஸ் விநியோகத்தில் முக்கியத் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றினார்.
அவுட்ஸ்டேண்டிங் லீடர்ஷிப் இன் பாங்க்கசூரன்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (2025) மற்றும் பாங்க்கசூரன்ஸ் லீடர் ஆஃப் தி இயர் (2026) உள்ளிட்ட விருதுகள் மூலம் அவரது தலைமைத்துவம் கௌரவிக்கப்பட்டுள்ளது.
வருண் டெல்லி பொறியியல் கல்லூரியில் பி.இ. (மெக்கானிக்கல்) பட்டமும், ஃபேக்கல்டி ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.